வித்தியாசமான மெனு கார்டு.. வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்திய சைனீஸ் உணவகம்..

வித்தியாசமான மெனு கார்டு.. வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்திய சைனீஸ் உணவகம்..

வித்தியாசமான மெனு கார்டு

உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சைனீஸ் உணவகம் வடிவமைத்துள்ள வித்தியாசமான மெனு கார்டு, இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
ஹோட்டலுக்கு சென்றால், அங்கு இருக்கும் உணவு வகைகளை அறிந்து கொள்ள மெனு கார்டு கொடுப்பார்கள். அதில், பெரும்பாலும் உணவுகளின் பெயர்கள் மட்டும் இடம்பெற்றிருக்கும். பல உணவுகளின் பெயர்கள் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அதனால், எந்தமாதிரியான உணவாக இருக்கும் என நமக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பு எழுந்து ஆர்டர் செய்துவிடுவோம். குறிப்பாக, சைனீஸ் உணவகங்களில் மெனு கார்டில் இருக்கும் உணவுகளின் பெயர்கள் பெரும்பாலும் பலருக்கும் புதிதாக இருக்கும்.

எந்த மாதிரியான உணவு என்று தெரியாவட்டாலும் கூட, அந்த உணவை ஒருமுறையாவது சுவைத்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஏனென்றால் உலகம் முழுவதும் சைனீஸ் உணவுகளுக்கு என்று தனி மோகம் இருக்கிறது. கனடாவில் இருக்கும் பிரபலமான சைனீஸ் உணவகம் ஒன்றில் இருக்கும், வித்தியாசமான மெனு கார்டு, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மெனு கார்ட் என்றால் உணவுகளின் பெயர்கள் மட்டும் இருக்கும் என்று தெரியும்,

ஆனால் அந்த ரெஸ்டாரண்டில் இருக்கும் மெனு கார்டில் உணவின் சுவை எப்படி இருக்கும், எந்தெந்தப் பொருட்களை கொண்டு சமைக்கப்படுகிறது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பதால், வாடிக்கையாளர்கள் உணவுகளை தேர்தெடுப்பதற்கு வசதியாக உள்ளது. கனடாவின் மொன்டீரில் நகரில் (Montreal) நகரில் இருக்கும் ஆன்ட் டாய் சைனீஸ் ரெஸ்டாரண்டில் (Aunt Dai Chinese restaurant) தான் அந்த வித்தியாசமான மெனு கார்டு இருக்கிறது. அண்மையில் அந்தக் கடைக்கு சென்ற பெண் ஒருவர், ரெஸ்டாரண்டின் மெனு கார்டை பார்த்து வியந்து டிவிட்டரில் புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார்.

சைனீஸ் உணவு வகைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அந்த மெனு கார்டில் இருக்கும் ஆரஞ்ச் பீப் (Orange Beef) உணவை தேர்தெடுத்தால், அந்த உணவுக்கு கீழ் கடை உரிமையாளரின் விமர்சனம் இடம்பெற்றுள்ளது. "ஆரஞ்ச் பீப் உணவை பொறுத்தவரை, ரெஸ்டாரண்டின் Tao chicken ஒப்பிடும்போது ஆரஞ்ச் பீப் உணவின் சுவை நன்றாக இருக்காது, வட அமெரிக்காவின் உணவுகளின் மீது எனக்கு பெரும்பாலும் விருப்பம் இல்லை என்பதால், இந்த உணவை தேர்தெடுப்பது உங்கள் விருப்பம்" என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, தங்கள் கடையில் இருக்கும் உணவின் சுவை குறித்து வெளிப்படையாக மெனு கார்டில் தெரிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனர்கள் பெரும்பாலும், தங்கள் நாட்டின் உணவு வகைகளை மட்டுமே விரும்பி உண்ணக்கூடியவர்கள். அதில், அமெரிக்கன் சைனீஸ், கனடியன் சைனீஸ், இந்தியன் சைனீஸ் போன்று தயாரிக்கப்படும் சுவைகளை அவர்கள் விரும்புவதில்லை.

அந்தந்த நாட்டில் இருக்கும் உணவு வகைகளுக்கு ஏற்ப சுவையில் சிறிது மாற்றம் செய்து சைனீஸ் உணவுகள் கொடுக்கப்படுவதால், அந்த சுவை சீனர்களுக்கு பிடிப்பதில்லை. மற்றொரு புகைப்படத்தில் satay sauce beef உணவு இடம்பெற்றுள்ளது. அந்த உணவு குறித்து கடை உரிமையாளர் கொடுத்துள்ள விமர்சனத்தில் " எங்கள் ரெஸ்டாரண்டில் மிகவும் பிரபலமான உணவு satay sauce beef, ஆனால் அதனை இதுவரை நான் சுவைத்து பார்த்ததில்லை என கூறியுள்ளார்.

மெனு கார்டில், உருளைக்கிழங்கில் செய்யப்படும் அமெரிக்கன் பாஸ்ட்புட்டை விமர்சித்துள்ள அவர், அதற்கு மாற்றாக பிரெஞ்சு வகையில் செய்யப்படும் உருளைக்கிழங்கு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளார். மேலும், தங்கள் கடையில் இருக்கும் நூடுல்ஸ் வகைகள் மிகவும் சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்றும் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவுகளின் மீதான தன்னுடைய பார்வையை மெனுக்கார்டில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள கடை உரிமையாளரின் அணுகுமுறை இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்ட் டாஸ் ரெஸ்டாரண்டின் மெனு கார்டை டிவிட்டரில் லைக் செய்துள்ளனர்.

 
Published by:Sankaravadivoo G
First published: