Viral Auto | இப்படியும் ஒரு ஹை-டெக் ஆட்டோவா? அசத்தும் சென்னை நபர்!

"ஆட்டோ அண்ணா" என்று பிரபலமாக அழைக்கப்படும் அண்ணாதுரை எந்த ஒரு சாதாரண வாகனத்திலும் இல்லாத வசதிகளை தன் ஆட்டோவில் வைத்திருக்கிறார்.

"ஆட்டோ அண்ணா" என்று பிரபலமாக அழைக்கப்படும் அண்ணாதுரை எந்த ஒரு சாதாரண வாகனத்திலும் இல்லாத வசதிகளை தன் ஆட்டோவில் வைத்திருக்கிறார்.

  • Share this:
சென்னை நகரத்தில் பயணிகளின் சௌகரியத்திற்காக சில வசதிகளை கொண்ட ஆட்டோக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோ முழுவதையும் ஒரு ஹை-டெக் வசதி கொண்ட வாகனமாக மாற்றியுள்ளார். இதன் மூலம் தன்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றிக்கொண்டுள்ளார் என்றே சொல்லாம். தொழில்முனைவோராக மாற ஒருவருக்கு ஏசி வசதி கொண்ட தனி அறை மற்றும் பணியாளர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் இவர் நிரூபித்துள்ளார்.

"ஆட்டோ அண்ணா" என்று பிரபலமாக அழைக்கப்படும் அண்ணாதுரை எந்த ஒரு சாதாரண வாகனத்திலும் இல்லாத வசதிகளை தன் ஆட்டோவில் வைத்திருக்கிறார் என்றால் அது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. அதாவது இவர் தனது முழுவாகனத்தையும் கேஜெட்களைக் கொண்ட ஹைடெக் வாகனமாக மாற்றியுள்ளார். ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பாய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கதையை உள்ளடிக்கிய வீடியோ கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் தனது ஆட்டோவில் வழங்கும் வசதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை மக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது மகிழ்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் பிறருக்கு நல்ல ஊக்கத்தையும் அளிக்கிறது.
வீடியோவில், துரை நிதி நெருக்கடி காரணமாக தனது படிப்பை தொடரமுடியாமல் போனது பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். இருப்பினும் சோர்ந்துபோகாமல் அதற்கு பதிலாக, தன்னால் முடிந்த அளவு சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாக வீடியோ கிளிப்பில் வரும் வாக்கியங்கள் விளக்கியது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டும் தொழிலை துரை கையில் எடுத்தார். மேலும் தனது ஆட்டோ ரிக்‌ஷாவை நகரத்தின் சிறந்த ஆட்டோவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்த அவர், அதனை செய்தும் காட்டியுள்ளார். துரையின் வாகனம் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் அவரது ஆட்டோவில் முகக்கவசங்கள், சானிடைசர், ஒரு மினி-ஃப்ரிட்ஜ், ஒரு ஐபாட் மற்றும் டிவி ஆகிய ஹை-டெக் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளன.

Must Read | ’தூக்கம் முக்கியம் குமாரு...’- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டுமா? தூக்கம் சார்ந்த பழக்கத்தில் கவனம் தேவை!

இந்த வீடியோ கடந்த ஜூலை 15ம் தேதி அன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்படத்தில் இருந்து இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. தற்போதைய கொரோனா நெருக்கடியால் அவதியுறும் நிலையிலும், தன்னால் முடிந்த அளவு ஈடுபாட்டுடன் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர் துரையை மக்கள் புகழ்ந்து தள்ளினர். படிப்பை தொடரமுடியவில்லை என்றாலும் தனது கனவுகளுக்கு பூட்டு போட்டுவிட்டு எதையாவது சாதிக்க துடிக்கும் துரைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், அவரது ஹைடெக் வாகனத்தில் பயணம் செய்ய விரும்புவதாகவும், அவரது முயற்சிகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை மிகவும் ஆச்சரியமான வகையில் புதுப்பித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். மேலும் கொரோனா சமயத்தில் ஆட்டோவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வைத்து பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவி புரிந்து வந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையை அடைவதற்கு முன்பு சிறிது ஓய்வு கிடைக்கும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும் சில ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோவில் மருத்துவ முகக்கவசங்கள், சானிடைசர்கள் மற்றும் பிற COVID தொடர்பான முன்னெச்சரிக்கை உபகரணங்களை தங்கள் வாகனத்தில் வைத்திருந்தனர். அந்த வரிசையில், சென்னையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் துரையும் தற்போது இணைந்துள்ளார்.
Published by:Archana R
First published: