சமையல் செய்வது ஒரு கலை என சொல்வார்கள்.சமையலில் பல வகையான முறைகள் உள்ளன. அதுவும் இப்பொழுதெல்லாம் இணையதளத்தில் நடனமாடிக்கொண்டு சமைப்பது பாடிக்கொண்டு சமைப்பது என்று நிறைய வீடியோக்கள் வலம் வருகின்றன. அப்படியொரு வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துர்காபூரில் ஒரு சமையல்காரர் இருக்கிறார். அவர் செய்யும் சமயலை பார்க்கவே ஒரு தனி கூட்டம் கூடுகிறது. அப்படி என்ன அதிசயம் என்று தோன்றுகிறதா? அவர் கண்களைக் கட்டிக்கொண்டு சமையல் செய்கிறார். ஆனால் சுவையும் மணமும் ஆளையே மயக்கிவிடும் அளவிற்கு இருக்குறது. அவர் செய்யும் சில சீன உணவுகள் உணவுப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
நேபாள சமையல்காரர் சுபாஷ் பகதூர் சேத்ரியின் கையால் செய்யப்பட்ட மிருதுவான பேபி கார்னை சாப்பிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அக்ரானி மோர், பெனாசிட்டி மற்றும் துர்காபூர் அருகேயும் பல சீன உணவகம் உள்ளது. அதே போல் இந்த நிறுவனத்திற்கு மேலும் ஒரு கடை உள்ளது. ஆனால் அக்ரானி மோரில் உள்ள கடையில் மட்டும் கூட்டம் எப்போதும் அதிகமாக உள்ளது.
அதற்கு காரணம் சுபாஷ் பகதூர் சேத்ரி என்பவர் தான். இவர் ஒரு நேபாளி இருப்பினும், தற்போது துர்காபூர் நகரில் வசித்து வருகிறார். 16 வயதில் சமையல்காரராக வேலை செய்யத் தொடங்கினார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்துவிட்டன. சுபாஷ் பகதூர் சேத்ரியின் கைகளின் மந்திரத்தால் இன்று உணவின் சுவை தனித்துவமாக அனைவரலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது
அவரது சமையல் நுட்பம் மக்களை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது. அனுபவத்தால் இன்று எந்த சீன உணவையும் கண்ணை மூடிக்கொண்டு கச்சிதமாக உருவாக்கிவிடுவார். இதன் சுவை எந்த பெரிய சமையல்காரரையும் தோற்கடிக்கடித்துவிடும். இதுகுறித்து, சீன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், சுபாஷ் பகதூர் சேத்ரிக்கு சமையல் என்பது உயிர் போன்றது.
அவர் சமையலை மிக அன்பாக இதயத்திலிருந்து செய்கிறார். அவர் அவரது வெலை மேல் வைத்திருக்கும் காதல் தான் இதற்கு காரணம். அதனால் தான் அவரால் கண்ணை மூடிக் கொண்டு சமைக்க முடிகிறது.அதனால்தான் அவர் கடைப்பிடித்த இந்த சமையல் உத்தியைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.