கர்நாடக பைக்கரை தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன?

கர்நாடக பைக்கரை தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன?

மனிதநேய காவலர்

தென்காசிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கர்நாடக சுற்றுலா பயணி ஒருவர் தமிழக காவலரின் மனிதநேயத்தை கண்டு நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். தன்னை எதற்காக தமிழக காவலர் தடுத்து நிறுத்தினார் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சமுக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.

  • Share this:
பொதுவாக நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பைக்கர்கள் அந்தந்த பகுதி காவலர்களால் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். பைக்கர்களுக்கும், காவலர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்து வருகிறது. இது தொடர்பான காணொலிகளை யூடியூபில் அதிகம் பார்க்க முடியும்.

ஆனால், கர்நாடக வாலிபர் ஒருவர், தமிழகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஆனால் இது அவர் சந்தித்த பிரச்னை குறித்தாக இல்லாமல் வேறு வகையில் இருக்கிறது.

கர்நாடக மாநில பைக்கர் AnnyArun என்பவர், தன்னுடைய கேடிஎம் பைக்கில் பாண்டிச்சேரியில் இருந்து சாலைப் பயணமாக தென்காசிக்கு பயணமாகிக் கொண்டிருந்தார். அப்போது அவரை காவலர் ஒருவர் வழிமறித்தார். ஆனால் வாகன பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ் போன்ற சான்றுகளை கேட்பதற்காக அந்த காவலர் கர்நாடக வாலிபரை வழிமறிக்கவில்லை.

கர்நாடக வாலிபர் தனது ஹெல்மெட்டில் வீடியோ கேமரா ஒன்றை பொருத்தியிருக்கிறார். அதில் பதிவாகியுள்ள வீடியோவில், கர்நாடக வாலிபரை வழிமறிக்கும் காவலர் நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவரா எனக் கேட்கிறார். ஆமாம் என அந்த வாலிபர் கூறும்போது. சாலையில் செல்லும் அரசுப் பேருந்தை சுட்டிக்காட்டி, இது போன்ற கவர்மெண்ட் பஸ் ஒன்று முன்னாள் சென்றுகொண்டிருக்கிறது, அதில் உள்ள அம்மா ஒருவர் இந்த மருந்து பாட்டிலை தவறவிட்டுவிட்டார். நீங்கள் வேகமாக பஸ்ஸை முந்திச்சென்று பேருந்தில் செல்லும் அந்த அம்மாவிடம் இந்த மருத்து பாட்டிலை கொடுத்து விடுங்கள் என்கிறார்.

https://youtu.be/fvGVaMJE8vI

உடனே அந்த பாட்டிலை பெற்றுக்கொண்ட கர்நாடக வாலிபர், தனது பைக்கை வேகமாக செலுத்தி செல்லும் போது காவலர் சொன்னது போலவே பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் சைகை காட்டி முன்னாள் சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துகிறார். பின்னர் நடந்தவற்றை விளக்கிக்கூறி தன்னிடம் இருந்த மருந்து பாட்டிலை அந்த அம்மாவிடம் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை அந்த கர்நாடக வாலிபர் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காவலரின் மனிதநேயத்தை அவர் வியந்து பாராட்டியிருக்கிறார். பொதுவாகவே காவல்துறையினர் மீது இருக்கும் எதிர்மறையான பார்வையை பொய்யாக்கும் விதமாக செயல்பட்டிருக்கும் அந்த மனிதநேயமிக்க காவலரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Arun
First published: