ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கூட்டுக் குடும்பத்திற்கு சிறந்த உதாரணம்... ஆனால் ஒரே குடும்பத்தில் இத்தனை நபர்களா.?

கூட்டுக் குடும்பத்திற்கு சிறந்த உதாரணம்... ஆனால் ஒரே குடும்பத்தில் இத்தனை நபர்களா.?

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பம்

Joint Family | ஒரே வீட்டில் ஒன்றல்ல இரண்டல்ல 72 பேர் சேர்ந்து வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எங்கே வாழ்கிறார்கள்? எப்படியெல்லாம் வாழ்க்கையைக் கடந்து செல்கிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை இங்கே நாமும் தெரிந்துக் கொள்வோம்…

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூட்டுக்குடும்பமா, அப்படியென்றால் என்ன? என வியப்போடு கேள்விகளை கேட்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். 60 களில் கூட்டுக்குடும்பத்தில் தான் வாழ வேண்டும் எனவும் அங்குள்ள அனைவரையும் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும் என திருமணமான பெண்களுக்குச் சொல்லி அனுப்புவார்கள் அவர்களின் பெற்றோர்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. சிலர் குடும்பத்தோடு வாழ பிடிக்காமல் தனிக்குடும்பமாக வாழ்கிறார்கள். மற்றும் சிலரோ பணி நிமிர்த்தமாக பிரிந்து வாழ நேரிடுகிறது. இதன் காரணமாக தாத்தா, பாட்டி,அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அண்ணன், தம்பி என்ற உறவின் அருமைத் தெரியாமலே வளர்கிறார்கள் இன்றைய தலைமுறைகள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்திலும் தாத்தா, பாட்டி, பாட்டான், அத்தை, மாமா, அண்ணன், தம்பி, சித்தி, சித்தப்பா என ஒரே குடும்பமாய், ஒரே வீட்டில் ஒன்றல்ல இரண்டல்ல 72 பேர் சேர்ந்து வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எங்கே வாழ்கிறார்கள்? எப்படியெல்லாம் வாழ்க்கையைக் கடந்து செல்கிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை இங்கே நாமும் தெரிந்துக் கொள்வோம்…

72 உறுப்பினர்கள் வாழும் அதிசய குடும்பம்…

மகாராஷ்டிராவில் சோலாபூர் என்ற பகுதியில் தலை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். அஷ்வின் தோய் ஜோடா என்பவர் தான் இந்தக் குடும்பத்தின் ஆணி வேர். இவரின் மகன், மகள், பேத்தி, பேரன் என ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தற்போது இதன் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. தனியாக வாழ்வது எங்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது என்றும் கூட்டுக்குடும்பம் தான் எங்களின் உயிர் மூச்சாக மாறிவிட்டது என்று மகிழ்வுடன் கூறுகின்றனர் இக்குடும்ப உறுப்பினர்கள்.

பொதுவாக ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே உணவு சமைப்பதற்கு அதிக செலவாகும். இங்கு 72 பேர் உள்ள போது சொல்லவா வேண்டும்? சமையலுக்கு இங்கு செலவிடும் உணவுப்பொருள்களின் அளவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இக்குடும்பத்தில் காலை மற்றும் மாலை என இரு வேளைக்கும் டீ போட வேண்டும் என்றால் தினமும் 20 லிட்டர் பாலும், 15 கிலோ வரை காய்கறிகள் வாங்குகிறார்களாம். உணவுக்காக இவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் 1200 செலவு செய்கின்றனர். ஏதேனும் விசேஷ நாள்களில் அசைவ உணவு சமைக்க வேண்டும் என்றால், 4 மடங்கு கூடுதல் செலவாகுமாம். இதோடு ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு என 40 முதல் 50 பைகள் வரை வாங்கி முன்கூட்டியே சேமித்து வைப்பதாகவும் கூறுகின்றனர் இக்குடும்பத்தில் உள்ள நபர்கள்.

Also Read : நான்கு கண்டங்கள் கடந்து, 30,000 கி.மீ பயணித்து உணவு டெலிவரி செய்த பெண்... சுவாரஸ்ய சம்பவம்

மேலும் இக்குடும்பத்தில் உள்ள மருமகள் ஒருவர் கூறுகையில், ஆரம்பத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்வது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது என்றும், நன்றாக பழகிய பின்னர் இதை விட்டு செல்ல முடியவில்லை என்கின்றனர். ஆரம்பத்தில் ஒரே வீட்டில் வசித்ததால் யார் எந்த உறவு முறைகள் என்று தெரிந்துக்கொள்ள கஷ்டப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக விளையாடுவதற்கும், நல்ல முறையில் வளர்ப்பதற்கும் பல உறவினர்கள் ஒரே வீட்டில் இருப்பதால் எங்களது குழந்தைகள் ஒரு போதும் தனிமையை உணர்ந்தது இல்லை என்று பெருமையுடன் கூறுகிறார்கள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்….. “ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை“ என்பதற்கு சிறந்த உதாரணமாக சோலாபூர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

Published by:Selvi M
First published:

Tags: Family, Tamil News, Trending