ஆஸ்திரேலிய கடையில் விற்பனையாகும் மைக்ரோவேவ் ஸ்லிப்பர் - கால் சுளுக்கு, வலியை தணிக்க புது ஐடியா!

மைக்ரோவேவ் ஸ்லிப்பர்

குளிர் காலங்களில் நீங்கள் அடிக்கடி சூடான போர்வைகள் மற்றும் ஆடைகள் மற்றும் சூடான நீரைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், இந்த செருப்புகள் உங்களுக்கு  விருப்பமாக இருக்கும் என்பதை நிரூபிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்காக கால்களை சூடாக வைத்திருக்க உதவும் வகையில் மைக்ரோவேவ் செய்யக்கூடிய செருப்புகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. செருப்புகளை வெப்பமாக்கும் வசதி மூலம் இது ஒருவரது கால் வலிகளைப் போக்க உதவும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

டார்கெட் எனப்படும் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் பல் டிபார்ட்மென்டல் ஸ்டார்களை நடத்தி வருகின்றன. இந்த கடையில் தான் மைக்ரோவேவபில் ஸ்லிப்பர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குளிர் காலங்களில் நீங்கள் அடிக்கடி சூடான போர்வைகள் மற்றும் ஆடைகள் மற்றும் சூடான நீரைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், இந்த செருப்புகள் உங்களுக்கு  விருப்பமாக இருக்கும் என்பதை நிரூபிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஸ்டோர் இந்த செருப்புகளை வாடிக்கையாளர்களுக்கு சில்லறை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் மூலம் ஒரு நபர் பாதுகாப்பாக தனது கால்களை மைக்ரோவேவ் செய்ய முடியும். இந்த வெள்ளை நிற ஸ்லிப்பர்கள் பாலியெஸ்டர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் உங்கள் கால்களை சூடாகவும் வசதியாகவும் வைத்திருக்க சில நிமிடங்கள் இந்த மைக்ரோவேவ் ஸ்லிப்பரை உபயோகித்தால் போதும்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஸ்லிப்பரில் வெப்பத்தை சமமாக பரப்புவதற்கு தனிநபர்கள் அந்த செருப்புகளை சூடாக்கிய பின் நன்கு அசைக்க வேண்டும். செருப்புகளின் வெப்பநிலையை சரிபார்க்க முதலில் உங்கள் கையின் பின்புறத்தை அதன் மீது வைத்து வெப்பநிலை போதுமான அளவில் இருக்கிறதா என்பதை கவனிப்பது அவசியம். மைக்ரோவேவ் மெஷினில் இருந்து உங்கள் கால்களை எடுத்த பிறகும் செருப்புகளுக்குள் வெப்பநிலை தொடர்ந்து உயரக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வெப்பமூட்டும் நேரத்தை சரிபார்ப்பதும் அவசியம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also read... 93 ஆண்டுகள் பழமையான சரவிளக்கு சட்டத்தை மணமுடிக்க விரும்பும் பெண்: இங்கிலாந்தில் வினோதம்!

மேலும் இந்த ஸ்லிப்பர்களை வாங்குபவர்கள், அதன் அதிக வெப்பமடைதலுக்கான அறிகுறிகளையும், தப்பித்தவறி ஓவன் எரியும் போது ஏற்படும் வாசனை மற்றும் புகை பற்றிய குறிப்பையும் கவனமாக ஆராய வேண்டும் என்றும் உற்பத்தியாளரால் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், செருப்புகளை கவனமாக மைக்ரோவேவிலிருந்து வெளியே எடுத்துவிட்டு மெஷினை குளிர்ந்த தண்ணீரில் போட வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சூடான ஸ்லிப்பர்கள் காயங்கள் மற்றும் சுளுக்கு ஆகியவற்றிலிருந்து தற்காலிக நிவாரணத்தை அளிக்கக்கூடும் என்பதோடு வலி நிவாரணத்தையும் வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்லிப்பர்களின் விலை $ 20 ஆகும். மேலும் இவை உலகளாவிய கால் அளவு விருப்பத்தில் கிடைக்கிறது. செருப்புகளின் உள் அடுக்கு நச்சு அல்லாத சிலிக்கா மணிகளால் ஆனது, வெளிப்புற வடிவமைப்பு பாலியெஸ்டரால் ஆனது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: