ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒரே ஒரு காஃபி கப் தான்.. உங்கள் வேலையை உறுதி செய்யும்..முதலாளி செய்யும் தந்திரமான இண்டர்வியூ..

ஒரே ஒரு காஃபி கப் தான்.. உங்கள் வேலையை உறுதி செய்யும்..முதலாளி செய்யும் தந்திரமான இண்டர்வியூ..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த பரீட்சையின் உண்மையான நோக்கமே ஒருவரால் தன்னுடைய வேலையை தாமே செய்ய முடியுமா, அந்த அளவிற்கு அவர் திறன் படைத்தவரா என்பதை அறிவது தான் என ட்ரெண்ட் ஐனெஸ் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாஃப்ட்வேர் கம்பெனியின் முதலாளி ஒருவர் தன்னுடைய பணியாளர்களை தேர்வு செய்யும் வித்தியாசமான முறையைப் பற்றி போட்காஸ்ட் ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ட்ரெண்ட் ஐனெஸ் என பெயர் கொண்ட அந்த நபர் செரோ என்ற சாப்ட்வேர் கம்பெனியின் முதலாளியாக இருந்து வருகிறார். சமீபத்தில் போட்கேஸ்ட் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் தன்னுடைய இந்த வித்தியாசமான பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை பற்றிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார். ஒருவர் காபி கப் மூலம் எவ்வாறு தனது நடத்தையை வெளிப்படுத்துகிறார் என்பதை மிக எளிதாக கண்டறிந்து அவர்களுக்கு வேலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது திறமையுள்ள, ஆர்வம் மிகுந்த நபர் யாரேனும் ஒருவரை நேர்காணலின்போது ட்ரெண்ட் கண்டுகொண்டால், அவரை காபி குடிப்பதற்காக அலுவலகத்தின் சமையலறைக்கு அழைத்துச் செல்வாராம். அதன்பின் இருவரும் காபி குடித்து முடித்ததும் , நேர்காணலுக்கு வந்திருந்த நபர் தன்னுடைய காபி கப்பை தானே மீண்டும் கிச்சனுக்கு எடுத்துச் செல்ல விருப்பம் காட்டினாலோ அல்லது எடுத்து சென்றாலோ அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவேளை தான் குடித்த காபி கப்பை அப்படியே வைத்து விட்டு சென்றால் அவ்வளவுதான், உங்களுக்கு வேலை கிடையாது. இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முறையின் மூலம் தான் பலரை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டை பொறுத்தவரை ஒருவர் தன்னுடைய காபி கப்பை தானே சுத்தம் செய்கிறார் என்றால், அவரால் தன்னுடைய திறமைகளையும், அறிவாற்றலையும், நல்லதொரு அனுபவத்தையும் சிறப்பாக பெற முடியும். அதேசமயம் இது வெறுமனே காபி கப்பை சுத்தம் செய்வது மட்டுமல்ல. ஒருவரின் குணாதிசத்தையும் குறிப்பது ஆகும். ஒருவர் தன்னுடைய காபி கப்பை தானே சுத்தம் செய்கிறார் என்றால் அவர் மிக பணிவான, அகம்பாவம் இல்லாத நபராக இருப்பார். இதுபோன்று சிறிய சிறிய விஷயங்கள் தான் நம்மைப் பற்றிய ஒரு மதிப்பை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பற்றி மேலும் பேசிய அவர் “எங்கள் அலுவலகத்திற்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களுடைய சமையல் அறையை பார்த்து வியந்து விடுவீர்கள். அது எப்போதும் சுத்தமாக, பளபளப்பாகவே இருக்கும். அதுவும் கிட்டத்தட்ட காபி கப் சோதனையை போன்று தான். எப்போதுமே எங்கள் அலுவலகத்தின் சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் நேர்காணலுக்கு வரும் நபர்கள் தன்னுடைய காபி கப்பை தாமே சுத்தம் செய்ய வேண்டும் என்பது இதனுடைய நோக்கம் அல்ல. இதன் உண்மையான நோக்கமே ஒருவரால் தன்னுடைய வேலையை தாமே செய்ய முடியுமா, அந்த அளவிற்கு அவர் திறன் படைத்தவரா என்பதை அறிவது தான், இவ்வாறு ட்ரெண்ட் ஐனெஸ் கூறியுள்ளார்.

First published:

Tags: Trending, Viral