Home /News /trend /

மெக்சிகோவில் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட புத்திசாலியான 8 வயது சிறுமி!

மெக்சிகோவில் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட புத்திசாலியான 8 வயது சிறுமி!

சிறுமி

சிறுமி

தனது மகளின் அசாதாரண புத்திசாலித்தனத்தை அறிந்திருந்த சான்செஸ், அதாராவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
அதாரா பெரெஸ் என்ற சிறுமிக்கு 162 ஐக்யூ அளவு உள்ளது சமீபத்தில் தெரிய வந்தது. இது குறிப்பிடத்தக்க மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஐக்யூமதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஐக்யூ 160 மட்டுமே உள்ள நிலையில் அடாராவிற்கு 162 இருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

2019ம் ஆண்டில் யுகடன் டைம்ஸ்சில் வெளியான தகவலின்படி அதாராவுக்கு 3 வயதாக இருந்தபோது, ​​ஆஸ்பெர்கர்ஸ் நோய்க்குறி (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்) இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு வளர்ச்சி கோளாறு ஆகும், இது ஒரு நபருக்கு சமூக தொடர்புகள் அல்லது சொற்கள் புரிவதை கடினமாக்கும். இதுகுறித்து பேசிய அதாராவின் தாயார் நல்லாரே சான்செஸ், "அவள் தன் நண்பர்களுடன் ஒரு சிறிய வீட்டில் விளையாடுவதை நான் பார்த்தேன், அப்போது அவள் விசித்திரமாக நடந்து கொண்டாள். இதனால் அவளை ஒரு சிறிய அறையில் தனியாக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதும் அவளது நண்பர்கள் அவளை வெவ்வேறு பெயர்களில் அழைக்க ஆரம்பித்தனர். இதனால் என் மகள் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் அவர்களை வீட்டிற்குள் அதன்பின்னர் அனுமதிக்கவில்லை. சான்செஸின் கூற்றுப்படி, அதாரா மிகவும் ஆழ்ந்த மனச்சோர்வில் இருந்ததால் அவள் இனி பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவித்தார். மேலும் அதாராவின் பள்ளி ஆசிரியர்கள் அவள் வகுப்பில் அடிக்கடி தூங்குகிறாள், சரியாக படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை என கூறினர்.

எனினும் தனது மகளின் அசாதாரண புத்திசாலித்தனத்தை அறிந்திருந்த சான்செஸ், அதாராவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார், அதன்படி மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அதாராவிற்கு IQ லெவல் அதிகம் இருப்பதை அடையாளம் காணப்பட்டது, மேலும் தனித்துவமான திறன்களை கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு கற்றல் சூழலில் அவள் தனது படிப்பை தொடர்ந்தார்.

அங்கு அதாரா தனது தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியை தனது எட்டு வயதில் முடித்தார். மேலும் தனது இரண்டு ஆன்லைன் பட்டங்களையும் முடித்துள்ளார். மேலும் ‘Do Not Give Up’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதனையடுத்து தற்போது ஃபோர்ப்ஸ் மெக்ஸிகோவின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அதாரா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read... காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு - நாசா வெளியிட்ட கண்கவர் புகைப்படங்கள்!

மாற்று திறனாளிகளின் உணர்ச்சிகளைக் கண்காணிக்கும் மற்றும் முன்கூட்டியே தடுக்கும் ஒரு புதிய ஸ்மார்ட் பிரேஸ்லெட்டையும் அதாரா உருவாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் அதாரா ஆங்கிலம் கற்று வருகிறார், மேலும் அவர் வானியல் இயற்பியல் குறித்தும் ஆராய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Albert Einstein, Mexico, Stephen Hawking

அடுத்த செய்தி