ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பெருமூளை பாதிப்பு - சிகிச்சைக்கு தானே நிதி திரட்டிய 7 வயது சிறுமி!

பெருமூளை பாதிப்பு - சிகிச்சைக்கு தானே நிதி திரட்டிய 7 வயது சிறுமி!

எலிசபெத் ஸ்காட்டின் 7 வயது மகள் லிசா ஸ்காட்

எலிசபெத் ஸ்காட்டின் 7 வயது மகள் லிசா ஸ்காட்

உயிருக்கும் போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்றுவதற்காக அவர் எடுத்துள்ள முயற்சிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து நன்கொடை அளித்துள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இங்கிலாந்தில் பெருமூளையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி, தன் சிகிச்சைக்கு தேவையான நிதியை லெமன் ஜூஸ் விற்று திரட்டியுள்ளார்.

அலபாமாவில் வசித்து வரும் எலிசபெத் ஸ்காட்டின், 7 வயது மகள் லிசா ஸ்காட்டுக்கு பெருமூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவருக்கு விரைவில் மூளை ஆபரேஷன் செய்யப்படவுள்ளது. இதனையறிந்து கொண்ட அந்த சிறுமி தனது அம்மா நடத்தி வரும் பேக்கரி ஒன்றில் லெமன் ஜூஸ் ஸ்டாண்ட் ஒன்று அமைத்து தனது சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டியுள்ளார்.

இதுகுறித்து லிசா ஸ்காட்டின் தாய் எலிசபெத் ஸ்காட் பேசும்போது, கடந்த ஆண்டு கோடை காலத்தில் தன்னுடைய பேக்கரியில் எலுமிச்சை ஸ்டாண்ட்ஒன்றை மகள் நிறுவியதாக தெரிவித்தார். விளையாடுவதற்கு தேவையான பொம்மைகள், ஷூக்கள் வாங்குதற்கு அந்த எலுமிச்சை ஜூஸ் ஸ்டாண்ட் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்த லிசா ஸ்காட் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்த எலிசபெத், இந்த ஆண்டு அந்த ஸ்டாண்டின் மூலம் சிகிச்சைக்கு பணம் திரட்டும் நிலைக்கு அவர் வந்துள்ளது வேதனையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய எலிசபெத் ஸ்காட், லிசாவுக்கு பெருமூளையில் பாதிப்பு ஏற்பட்டது ஜனவரியில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். இரண்டு முறை திடீரென வலிப்பு ஏற்பட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும், அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் லிசாவுக்கு பெருமூளையில் பாதிப்பு ஏற்பட்டு செயலிழந்து வருவதாக கூறியதாக எலிசபெத் தெரிவித்தார்.

லிசாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததையடுத்து, தன்னுடைய லெமன் ஸ்டாண்டு மூலம் அந்த 7 வயது சிறுமி வாடிக்கையாளர்களிடம் நிதி திரட்ட தொடங்கியுள்ளார். அவர்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் சிறுமியின் நிலை அறிந்து தங்களால் இயன்ற பண உதவியை செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய எலிசபெத், தந்தை இல்லாத மகளாக தான் அவளை வளர்த்து வருவதாகவும், அவளுக்கு சிகிச்சைக்காக ஆகும் செலவுகளை தன்னால் கவனித்துகொள்ள முடியுமென்றாலும், அவளாகவே இந்த நிதி திரட்டலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

நிதி திரட்ட வேண்டாம் என லிசாவிடம் கூறியபோது, பிச்சையெடுப்பதற்கு லெமன் ஜூஸ் விற்று நிதி திரட்டுவதில் தவறில்லை என அவள் கூறியதாகவும் லிசாவின் தாய் எலிசபெத் தெரிவித்தார். சிறுமி லிசா பேசும்போது, தன்னுடைய லெமன் ஸ்டாண்ட் வருமானத்தில் பலர் 5,10,20 மற்றும் 100 டாலர் என பலர் நன்கொடை அளித்திருப்பதாக கூறினார். ஒட்டுமொத்தமாக லிசாவின் லெமன் ஸ்டாண்ட் மூலம் மட்டும் பெருமூளை சிகிச்சைக்காக 12,000 அமெரிக்க டாலர் நிதி திரண்டுள்ளது. எலிசபெத்தும் தன்னால் இயன்றளவு ஆன்லைன் மூலம் நிதி திரட்டலில் ஈடுபட்டார்.

Also read... இணையத்தை கலக்கும் 3 வயது லிட்டில் மாஸ்டர் செஃப் - வைரலாகும் சமையல் வீடியோக்கள்!

உயிருக்கும் போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்றுவதற்காக அவர் எடுத்துள்ள முயற்சிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து நன்கொடை அளித்துள்ளனர். இதுவரை சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர் லிசா சிகிச்சைக்காக கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய எலிசபெத், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கொடுத்துள்ள நிதி லிசாவின் சிகிச்சைக்கு போதுமானதாக இருப்பதாகவும் கூறினார்.

வரும் திங்களன்று போஸ்டன் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவளுக்கு பெருமூளை ஆபரேஷன் நடைபெற உள்ளதாகவும், அதில் இருந்து அவள் குணமடைந்து வரவேண்டும் என்றும் கடவுளை வேண்டிக்கொண்டிருப்பதாகவும் தாய் எலிசபெத் தெரிவித்தார். சிறுமி லிசா பேசும்போது, ஆபரேஷன் குறித்து கவலைப்படவில்லை, ஆனால் பயப்படுகிறேன் என கூறினார். லிசாவின் சிகிச்சைக்காக பலரும் நிதியுதவி அளிக்க முன்வந்திருக்கும் சூழலில் நோயின் தீவிரம் என்னவென்று அறியாத அந்த பிஞ்சு குழந்தை தற்போது பேக்கரியில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: England