Home /News /trend /

ஃபிரான்சு நாட்டின் 132 டன் எடையுள்ள அதிசயப் பாறை...!

ஃபிரான்சு நாட்டின் 132 டன் எடையுள்ள அதிசயப் பாறை...!

132 டன் எடையுள்ள அதிசயப் பாறை

132 டன் எடையுள்ள அதிசயப் பாறை

இந்தியாவிலும் இதே போல ஒரு பாறை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு இதைப்பற்றி கட்டாயமாக தெரிந்திருக்கும். கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்று கூறப்படும், மகாபலிபுரத்தில் இருக்கும் இந்த மேஜிக் பாறை, ஃபிரான்சு நாட்டில் இருக்கும் பாறையை விட அதை எடை கொண்டது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
உலகில் முழுவதும் பல்வேறு அதிசயங்களும் விசித்திரங்களும் நிறைந்துள்ளன. உலகத்தை இணையம் என்ற ஒரு புள்ளி இணைப்பதால், விசித்திரமான கண்டுபிடிப்புகள் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. பிரான்சு நாட்டில் 132 டன் எடையுள்ள ஒரு அதிசயப் பாறை பற்றிய தகவல் தற்போது பிரபலமாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஃபிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹுயல்கோட் என்ற வனத்தில் இருக்கும் டிரம்பிளிங் ஸ்டோன் மிகவும் பிரபலமானது. இது ஒரு கிரானைட் பாறை ஆகும். இதன் எடை 132 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாறையின் சிறப்பம்சமே, இது இவ்வளவு எடை கொண்டிருந்தாலும் எல்லா மனிதர்களாலும் எளிதாக அசைக்க முடிவது தான். மிகவும் பலவீனமான நபர்களால் கூட இந்த 132 டன் எடை கொண்ட பாறையை சுலபமாக அசைக்க முடியும்.

10 கிலோ எடையைக் கூட தூக்க முடியாதவர்கள் எப்படி 132 டன் எடை கொண்ட பாறையை நகர்த்த முடியும் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒரு பக்கம் மேஜிக் போலத் தோற்றமளித்தாலும் இது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறை ஒரு தட்டையான கல் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறையின் நடுப்பகுதி மட்டும் பேலன்ஸ் செய்யப்படுகிறது. இதன் முனைகள் அப்படியே விடப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பாறையின் எந்தப் பக்கத்தைத் தொட்டாலும், இது மேலும் கீழுமாக ஆடும்.

இந்த டிரம்பிளிங் ஸ்டோன் பற்றி தகவல் இப்போது தான் இணையத்தில் பிரபலமாகி வந்தாலும், ஃபிரான்சு நாட்டில் மிகவும் பிரபலமானது.

132 டன் எடை கொண்ட பாறையை அசைக்க முடியும் என்ற ஒரே காரணம் இந்த கல்லை மிகவும் பிரபலமாக்கி இருக்கிறது. இதனாலேயே, இந்த வனம் மிகப்பெரிய மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் மாறி வருகிறது. உலகம் முழுவதும் பிரான்ஸ் நாட்டுக்கு வருகை தருபவர்கள் பாறை இருக்கும் இடத்துக்கும் மறக்காமல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Also read... 2 கைகளும், கால்களும் இல்லாமலே வண்டி ஓட்டும் நபர்... அசந்து போய் வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா!

இந்தியாவிலும் இதே போல ஒரு பாறை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு இதைப்பற்றி கட்டாயமாக தெரிந்திருக்கும். கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்று கூறப்படும், மகாபலிபுரத்தில் இருக்கும் இந்த மேஜிக் பாறை, ஃபிரான்சு நாட்டில் இருக்கும் பாறையை விட அதை எடை கொண்டது. தொட்டாலே வழிக்குக் கொண்டு போகும் வெண்ணெய் போல இருப்பதாலேயே இந்த பாறைக்கு வெண்ணைப் பந்து என்ற பெயர் சூட்டப்பட்டது.

Also read... தனது செல்லப் பிராணியான பூனையை விமானத்தில் கொண்டு சென்ற பாசக்கார மனிதர்!

1300 வருடங்களுக்கும் மேல் இந்தப் பாறை உள்ளது. இந்தப் பாறையை லேசாகத் தொட்டாலே நகர்வது போலத் தோன்றும், உருள்வது போல தோன்றும் ஆனால் அது இதுவரை யாராலும் நகர்த்த முடியவில்லை. சுனாமியின் போதும், பூகம்பங்கள் ஏற்பட்ட போதும் கூட இந்த பாறை அசையாமல் அப்படியே தான் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி