“திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேஷன் - வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்“ வைரலாகும் இளைஞரின் கூகுள் ரீவியு

“திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேஷன் - வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்“ வைரலாகும் இளைஞரின் கூகுள் ரீவியு
  • News18 Tamil
  • Last Updated: November 28, 2019, 12:52 PM IST
  • Share this:
ஆவணங்கள் இல்லாததால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், தான் அடைக்கப்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையமும்,  சிறையும் தூய்மையாக இருப்பதாக பாராட்டி எழுதி இருப்பது சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் நள்ளிரவில் ஆவணங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததால், அவரை திருமுல்லைவாயல் போலீசார் சந்தேகத்தில் பிடித்து காவல் நிலைய சிறையில் அடைத்த தாக கூறப்படுகிறது.

சிறையிலிருந்து வெளிவந்த லோகேஸ்வரன்


தான் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையம் சிறப்பாக உள்ளதாகவும், சுத்தமாக உள்ளதாகவும் ,கண்டிப்பாக பொதுமக்கள் தங்கள் வாழ்நாளில் வந்து பார்க்க வேண்டிய இடம் என பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு பணிபுரியும் காவலர்கள் தன்மையாக நடந்து கொண்டதாகவும் எந்தவித லஞ்சம் வாங்காமல் தன்னை விடுவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவானது ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவிலும் பரவியுள்ளது. விசாரணை செய்ததில் லோகேஷ்வர் சென்னையில் இருக்கும் இடங்களுக்கு கூகுள் மூலம் ரிவியு பதிவிட்டு பொது மக்களுக்கு வழிகாட்டி வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் நள்ளிரவில்  யாரையும் கைது செய்யவில்லை என்றும் , அப்படி இருக்கும் இந்த கருத்து தவறானது என தெரிவித்துள்ளார்.
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்