• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தாகத்தால் தவித்த அணில் ... வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து உதவிய சுற்றுலா பயணி - வைரலாகும் வீடியோ

தாகத்தால் தவித்த அணில் ... வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து உதவிய சுற்றுலா பயணி - வைரலாகும் வீடியோ

தாகத்தால் தவித்த அணில்

தாகத்தால் தவித்த அணில்

அணில் ஒன்று சுற்றுலா பயணிகளிடம் தனது முன்னங்கால்களை அசைத்து தண்ணீர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    தாகம் எடுக்கும் காகத்தின் கதையை நாம் அனைவரும் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். ஆனால் அணில் ஒன்று தாகம் தாங்காமல் தண்ணீர் பாட்டில் வைத்திருக்கும் நபரிடம் வந்து தண்ணீர் தருமாறு கேட்கும் வீடியோ விலங்குகள் விரும்பிகள் இடையே மனதை உருக வைத்துள்ளது.

    அந்த வீடியோவில் அணில் ஒன்று தாகம் எடுத்ததால் சுற்றுலாப் பயணியிடம் தண்ணீருக்காக கெஞ்சுகிறது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அணில் என்ன கேட்கின்றது என புரியாமல் பின்னர் தங்கள் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் உள்ள நீரை எடுத்து அணிலுக்கு கொடுக்கின்றனர். பாட்டிலில் இருந்து நீரை பருகிய அணில் தனது தாகம் முழுமையும் தீர்த்துக் கொண்டது. தாகம் தீர்ந்த பின்னர் சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு பின்னர் செல்கின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தண்ணீர் விலைமதிப்பற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம், அதை நாம் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது போன்ற விலங்குகளின் தாகம் தவிப்பை காணும்போது, தண்ணீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம்.

    விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளுக்கு மனிதர்களாகிய நாம் பல இயற்கை நீர் ஆதாரங்களை விட்டுச்செல்லவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளுக்கு உங்கள் வீட்டின் அருகில் தண்ணீர் வழங்கத் தொடங்குவது நல்லது. மொட்டை மாடி வீட்டின் வெளியில் என பறவைகளுக்கும், மாடுகளுக்கும் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை கடைபிடித்தால் அவை பறவைகளின் உயிர்காக்கும் செயலாக அமையும்.



    கடந்த செப்டம்பர் மாதம் அணில் ஒன்று கூடைப்பந்து விளையாடிய வீடியோ இதேபோன்று இணையத்தில் வைரலானது. அதில் கூடைப்பந்து மைதானத்தில் புகுந்த அணில் ஒன்று எவ்வித பயமும் இன்றி அங்கிருந்த பந்தினை உருட்டி விட முயற்சி செய்கின்றது. தனது வாலை வைத்து பந்தினை எதிரில் இருக்கும் நபருக்கு திருப்பி அனுப்புகிறது.

     



    பின்னர் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும் படி அருகில் இருந்த விளையாட்டு வீரருடன் சேர்ந்து விளையாடி மகிழ்கின்றது. பார்ப்பதற்கே அணில் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டு இருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: