ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குடியிருப்பில் பொருட்களை திருடிவிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சென்ற திருடர்கள்!

குடியிருப்பில் பொருட்களை திருடிவிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சென்ற திருடர்கள்!

குடியிருப்பில்  திருடிவிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சென்ற திருடர்கள்

குடியிருப்பில் திருடிவிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சென்ற திருடர்கள்

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்து செல்வது பதிவாகியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். அப்படி, வீட்டில் நுழைந்து திருடும் போது சில வினோத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் வீட்டில் பொருட்கள் திருட்டு போயிருக்கிறது என்பது கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு ஒரு திருட்டுச் சம்பவம் நடந்திருக்கிறது என்றால் அது இந்த சம்பவம் தான். பொதுவாக, திருட வந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பொருட்களை கலைத்துவிட்டு செல்வதைக் கண்டிருக்கிறோம்.

ஆனால் இங்கு ஒரு வீட்டிற்கு திருடச் சென்ற நபர்கள் உடைத்த வீட்டின் லாக்கை மாற்றியதோடு, பொருட்களை திருடியது தெரியாமல் இருக்க அறையை கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரித்து சென்றுள்ளனர். ஜார்ஜியாவின் சாண்டி ஸ்பிரிங்ஸில் வசித்து வந்த ஒரு பெண், வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் வீடு அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு குழம்பிய அவர், பின்னர் வீட்டில் உள்ள பொருட்கள் திருடப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

TikTok இல் @glamourice என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் ஷைனா ரைஸ் என்ற அந்த பெண், தனது வீட்டின் மாறிய தோற்றத்தைப் பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அறிமுகமில்லாத சில நபர்கள் அவரது குடியிருப்பில் நுழைந்து பூட்டுகளை மாற்றியுள்ளதாகவும், வீட்டில் இருந்த சில பொருட்களை திருடியிருப்பதாகவும், அதில் சில பொருட்களை விற்றுள்ளதாகவும் எழுதியிருந்தார்.

மேலும் வீட்டின் சில பகுதிகளை மாற்றி அலங்கரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரைஸ் சுமார் 30 நாட்களாக தனது குடியிருப்பில் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இந்த திருட்டுச் சம்பவம் என்று நிகழ்ந்தது என்பது அவருக்கு தெரியவில்லை. இந்த நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்து செல்வது பதிவாகியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பெரிய கருப்பு குப்பை பைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஆகியவை இடம் பெற்றிருந்தது. விசாரணையின் போது அவரது வீட்டில் துப்பாக்கி மற்றும் கத்தி இருப்பதை போலீசார் கண்டுபிடித்ததாக ரைஸ் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

அடுத்த வீடியோவில் திருட்டுச் சம்பவம் பற்றி விளக்கிய ரைஸ், தனது இரண்டாவது வீட்டின் பால்கனியில் உள்ள சேமிப்பு அலகு திறந்திருப்பதாகத் தோன்றியது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனின் தந்தை அப்பகுதியில் பராமரிப்பு வேலை செய்வதாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் நினைத்தவாறு ஏதும் நடக்கவில்லை. ஸ்டோரேஜ் யூனிட்டில் தான் வேலை செய்யவில்லை என மகனின் தந்தை கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து ரைஸின் கணவர் வீடு முழுவதும் நன்கு கவனித்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவில் டேப்பை ஒட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து யாராவது வீட்டுக்குள் நுழைவதை பார்த்தார்களா என்று கேட்டார். இதுகுறித்து எந்த தகவலும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் தகராறு செய்யும் சத்தத்தை கேட்டதாகவும், அது ரைஸ் மற்றும் அவரது மகனின் தந்தை என்று கருதியதாகவும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறியுள்ளார்.

அபார்ட்மெண்ட் மேனேஜ்மென்ட் அலுவலகம், தங்களது சார்பில் பராமரிப்புப் பணியாளர்கள் அபார்ட்மெண்ட் உள்ளேயோ அல்லது அருகில் எங்கும் இல்லை என்று கூறியுள்ளனர். இந்த கேட்ட இருவரும் மிகுந்த குழப்பமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் மற்றொரு வீடியோவைப் பதிவேற்றிய ரைஸ், திருடர்கள் தனது அலமாரியை அகற்றிவிட்டதாகவும், தனது மகனின் உடைமைகளும் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.

Also read... தனது மனைவிக்காக தாஜ்மஹாலை போன்ற வீட்டை கட்டிய கணவர் - வைரலாகும் புகைப்படங்கள்!

மேலும் துணி துவைக்கும் லாண்ட்ரி மெஷின் காணாமல் போயிருப்பதாகவும், அந்த இடத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் இணையவாசிகளும் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து கருத்து பிரிவில் கமெண்ட் செய்த ஒரு நபர், யாரோ உங்கள் தினசரி நடவடிக்கை குறித்து நன்கு தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படியொரு நூதனமான திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Thieves