பறவைகள் தேடும் முதியவர் லியோனார்டோ - யார் இவர்?

லியோனார்டோ கரில்லா (REUTERS)

உணவுகளை, வாங்கி உண்ணும் அளவுக்கு அவருக்கும் பெலிக்கன்களுக்கும் இடையில் நெருக்கம் உள்ளது.

  • Share this:
20 வருடங்களுக்கும் மேலாக பெலிக்கன்களை குழந்தைகள்போல் வளர்த்து வரும் லியோனார்டோவின் செயல் பலரையும் நெகிழச்செய்துள்ளது.

கியூபாவைச் சேர்ந்த லியோனார்டோ கரில்லா, குவானிமர் கிராமத்தில் வசித்து வருகிறார். கியூபாவின் தெற்கு கடற்கரையோர பகுதியில் அந்த கிராமம் அமைந்துள்ளது. அங்கு தனிமையில் வசித்து வரும் அவருக்கு, பொழுதுபோக்கே பெலிக்கன்களுக்கு உணவளிப்பது. பெலிக்கன்கள் என்றால் தமிழில் கூழைக்கடா. லியோனார்டோவுக்கு பெலிக்கன்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய இடத்துக்கு வரும் பறவைகளும் மிகவும் பரிசத்துடன் இருக்கின்றன. கையில் வைத்திருக்கும் உணவுகளை, வாங்கி உண்ணும் அளவுக்கு அவருக்கும் பெலிக்கன்களுக்கும் இடையில் நெருக்கம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிகவும் பாசத்துடன் இருக்கும் சில பெலிக்கன் பறவைகளுக்கு மைக்கல், நோபிள், பான்சிட்டோ உள்ளிட்ட செல்லப் பெயர்களையும் வைத்து அழைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பெலிக்கன் பறவைகளின் கூட்டம் அவருடைய இடத்தை தேடிச் சென்று தங்கிக் கொள்கின்றன. குளிர்காலங்களில் அவருடைய இடத்துக்கு வரும் பெலிக்கன்கள் டிசம்பர் முதல் மே மாதம் வரை அங்கேயே இருக்கின்றன. அவருடைய இடத்தில் இருக்கும் அனைத்து பெலிக்கன்களுக்கும் லியோனார்டோ உணவளிக்கிறார். ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட பெலிக்கன்கள் அவருடன் வசிக்கின்றன.

மே மாதத்துக்குப் பிறகு இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் அடுத்த ஆண்டு மீண்டும் அவருடைய இடத்துக்கே வருகின்றன. இதுகுறித்து பேசிய லியோனார்டோ, "பறவைகள் இருக்கும் வரை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவற்றுடன் போதுமான நேரத்தை செலவிடுவேன். நேரம் செல்வதுகூட தெரியாது. பார்ப்பதற்கு அனைத்து பெலிக்கன்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. குழந்தைகள் போல் என்னுடன் இருக்கும் பெலிக்கன்கள், இடம் பெயர்ந்து செல்லும்போது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவைகளை என் குழந்தைகள் போல் வளர்த்து வருகிறேன். அவைகளும் என்மீது அளவற்ற அன்பைக் காட்டுகின்றன" என்கிறார்.

லியோனார்டோ கரில்லாவுக்கு 3 மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களில் இருவர் யூத் தீவில் வசிக்கின்றனர். மற்றொருவர் அந்த தீவுக்கு அருகாமையில் இருக்கும் நகரத்தில் வசித்து வருகிறார். பிரவுன் பெலிக்கன்கள் 2 மட்டுமே கியூபாவில் உள்ளது. பிரவுன் மற்றும் கிரே கலரில் நீண்ட கழுத்து கொண்டவையாக இருக்கும் பெலிக்கன்கள், தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தேடிக் கொள்ளும் திறன் உள்ளவை. நீண்ட கழுத்து இருப்பதால் மீன்களை லாவகமாக கொத்திச் சாப்பிடும். இருப்பினும், லியோனார்டா கொடுக்கும் இரையையும் சாப்பிடுகின்றன.

Also read... மாடுகளுக்கு பானி பூரி ஊட்டிவிட்ட நபர் - வைரலாகும் வீடியோ!

பெலிக்கன்களுக்கு உணவளிப்பது மட்டுமின்றி மீன் வலைகள், தூண்டிகளில் சிக்கி காயம்பட்டு வரும் பெலிக்கன்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்து காப்பாற்றுகிறார். "அந்த பறவைகளுடன் பழகுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அவை தங்கமான மனம் கொண்ட பறவைகள்" எனத் தெரிவிக்கிறார். மேலும், அந்த பறவைகள் தன் கையில் இருக்கும் இரையை எப்படி சாப்பிடுகின்றன என்பதையும் காட்டுகிறார். மீன் பிடித்தல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர், தற்போது உறவினர்கள் உதவியுடன் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார். பெலிக்கன்களுக்கு உணவளிப்பது என்பது எளிதான காரியமல்ல. நாளொன்றுக்கு 3 முறைக்கும் மேல் அந்த பறவைகளுக்கு உணவளித்து கரில்லா பாதுகாக்கிறார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: