பூனையுடன் எலி: புலியுடன் நாய் - இன எல்லைகளைக் கடந்து நட்புடன் பழகும் விலங்குகள்

பூனையுடன் எலி: புலியுடன் நாய் - இன எல்லைகளைக் கடந்து நட்புடன் பழகும் விலங்குகள்

விலங்குகள்

மனிதர்களைப் போலவே சில விலங்குகளும் எதிர்பாராத வகையில் மற்ற விலங்குகளுடன் நட்புடன் இருக்கின்றன. வெவ்வேறு இன விலங்குகள் பெரும்பாலும் எதிர்பாராத தோழர்களை உருவாக்குகின்றன. அவை இயற்கையின் பொதுவான புரிதலுக்கு சாத்தியமில்லை என்பதே நிதர்சனமாகும்.

 • Share this:
  பல செல்லப்பிராணிகள் ஒருவருக்கொருவர் உண்மையான மற்றும் நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அவைகள் ஒருவருக்கொருவர் உணர்ச்சிவசப்பட்ட ஆறுதலை வழங்குகின்றன அல்லது அவற்றின் அடர்த்தியான முடிகளை இழுப்பது போன்ற தீமைகளும்  செய்கின்றன.

  கோலா கரடி மற்றும் வொம்பாட் கரடி :

  கோலா அல்லது கோலா கரடி என்பது ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஆர்போரியல் தாவரவகை மார்சுபியல் ஆகும். இது பாஸ்கோலர்க்டிடே குடும்பத்தை சேர்ந்தது. அதன் நெருங்கிய உறவினர்கள் வோம்பாட்ஸ் ஆகும். அவை வோம்பாடிடே குடும்பத்தின் உறுப்பினர்களாக உள்ளன. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோலா பெரும்பாலும் நிலப்பரப்பின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் கரையோரப் பகுதிகளில்  காணப்படுகிறது.

  கொரோனா தொற்றுநோய்த் தொற்றின் போது, ​​நியூ சவுத் வேல்ஸின் சோமர்ஸ்பியில் உள்ள ஆஸ்திரேலிய ஊர்வன பூங்காவில் ஒரு கோலா கரடி மற்றும் ஒரு வோம்பாட் கரடி நெருக்கமாக பிணைந்துள்ளன. மார்சுபியல்கள் (கோலாஸ் மற்றும் வொம்பாட்ஸ்) இருவரும் நெருங்கிய உறவு வகையைச் சேர்ந்தவை. இது நெருக்கமான தொடர்புகளை எளிதாக்கியிருக்கலாம்.

  காண்டாமிருகம் மற்றும் செம்மறி ஆடு :

  பங்களாதேஷில் ஒரு பெண் காண்டாமிருகம், செம்மறி ஆடுகளுடன் நண்பரான பிறகு தனது மன அழுத்தத்தை சமாளித்தது. தனது ஆண் துணை இறந்த பிறகு காண்டாமிருகம் மனச்சோர்வடைந்தது, எனவே மிருகக்காட்சிசாலையின் தொழிலாளி ஆடுகளை காண்டாமிருகத்துடன் தோழமைக்காக வைத்தார். அதன்பின், அவை இரண்டும் ஐந்து ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

  எருமை மாடு மற்றும் பறவைகள் :

  ஆப்பிரிக்காவில், ஆப்பிரிக்க எருமை தனது முதுகின்மேல் பறவைகள் குழுவை சுமந்து செல்வதை கண்டபோது, ​​பசு அல்லது எருமை மீது பறவைகள் உட்கார்ந்திருக்கும் என்ற பழைய கதை உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பறவைகள் பெரும்பாலும் எருமைகளின் முதுகில் உட்கார்ந்திருக்கின்றன, அவை பேன்களை உணவாக்கி கொள்கிறது என்று கூறப்படுகிறது.

  பூனை மற்றும் எலி :

  நியூயார்க்கில் ‘புரூக்ளின் கேட் கபே’ என்று அழைக்கப்படும் பூனை தத்தெடுப்பு மையம் செயல்படுகிறது. இங்கு கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை பராமரிக்க, நட்புடன் பழக, வீட்டில் எலிகளை துரத்த பூனைகளை தத்து எடுத்து செல்கின்றனர். அங்கு எலிகளும், பூனைகளுடன் நண்பர்களாக பழகுகின்றன.

  ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் புலி :

  மியாமியில், விலங்கியல் வனவிலங்கு அறக்கட்டளை சிறுத்தைகள், சிங்கங்கள் மற்றும் ஒட்டகம் உள்ளிட்ட காட்டு விலங்குகளை பராமரிக்கிறது. அதன் உரிமையாளர்கள் பெரும்பாலும் தங்கள் (ஜெர்மன் ஷெப்பர்டை) நாயை அழைத்து வந்து தங்கள் காட்டு விலங்குகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறார்கள். அவர்களின் நாய் விலங்குகளுடன் ஒரு நல்ல தோழனாக முடியும் என்று கண்டறியப்பட்டது. மிருகக் காட்சி சாலையில் குட்டி புலிகளுடன், அந்த நாய் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
  Published by:Karthick S
  First published: