• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ராணியாக பொறுப்பேற்க மூளையை சுருக்கும் ஜம்பிங் எறும்புகள்...!

ராணியாக பொறுப்பேற்க மூளையை சுருக்கும் ஜம்பிங் எறும்புகள்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நம்முடனே இந்த உலகில் வாழ்ந்து வரும் சில பூச்சி இனங்கள் தங்களது மூளையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒரு தனித்துவமான குணங்கள் இருக்கும். நம்முடனே இந்த உலகில் வாழ்ந்து வரும் சில பூச்சி இனங்கள் தங்களது மூளையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா? படிக்கும் போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, சில இனங்கள் தேவைப்படும் நேரங்களில் அவற்றின் மூளை அளவை மாற்றியமைத்து கொண்டு, பின் மீண்டும் பழைய அளவிற்கு கொண்டு வருகின்றன என்பது தெரியவந்துள்ளது.

பூச்சி இனங்கள் மூளையின் அளவை மாற்றி அமைத்து கொள்வது தொடர்பாக இந்தியன் ஜம்பிங் எறும்புகள் எனப்படும் பூச்சி இனத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்திய ஜம்பிங் எறும்புகள் பற்றிய புதிய ஆராய்ச்சி, அவை பூச்சிகளில் முன்னர் அறியப்படாத வியத்தகு மீளக்கூடிய மாற்றங்களுக்கு உட்படுவதை காட்டுகிறது. பெரும்பாலான எறும்பு கூட்டத்திற்கென்று ஒரு முன்னோக்கிய வரிசைமுறை உள்ளது. தொழிலாளர்கள் எறும்பு தேர்வு செய்யும் ராணி எறும்பு அனைத்து முட்டைகளையும் இடுகிறது. ஒரு சில எறும்பு கூட்டத்தில் ஏராளமான ராணிகள் இருக்கும்.

சில எறும்பு கூட்டம் இந்த முறையை ஏற்று கொள்ளும், சில எறும்பு கூட்டம் ராணி எறும்புகளை கொல்ல பார்க்கும். அதே நேரத்தில் எறும்பு கூட்டத்தின் ஒரு பகுதி உணவு, குழந்தை எறும்புகளை பராமரித்தல் உள்ளிட்ட பலவற்றை நிர்வகிக்கிறது. ஆண் எறும்புகளும், ராணிகளும் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். சில எறும்பு கூட்டங்களில் ராணி எறும்புகளின் இறப்பிற்கு பிறகு அந்த எறும்பு கூட்டம் முற்றிலும் அழிந்து விடுகிறது.

ஃபோர்செப்ஸ் போன்ற தாடைகள் மற்றும் பெரிய கருப்பு கண்கள் கொண்ட இந்திய ஜம்பிங் எறும்புகள் கூட்டத்தில் நடப்பது வேறு. இந்த எறும்பு காலனிகளில், ராணி எறும்புகள் இறந்தால், வேலைக்கார எறும்புகள் வினோதமான போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் வெற்றி பெறும் எறும்பு தலைமை பொறுப்பை ஏற்று முட்டைகளை உற்பத்தி செய்பவராக மாறுகிறது. இதன் போது வெற்றிகரமான பெண் எறும்பின் கருப்பைகள் விரிவடைந்து அதன் மூளை 25 சதவீதம் வரை சுருங்குகிறது. இவ்வாறு வேலைக்கார எறும்பு ராணியாக பொறுப்பேற்கும் போது மூளையின் அளவைக் குறைத்து, கருப்பைகளை விரிவுபடுத்தி சந்ததிகளைப் பெற்றெடுப்பது தனித்துவமாக கருதப்படுகிறது.

தவிர வேலைக்கார எறும்புக்கு ராணி பொறுப்பு முடிந்தவுடன் (தங்கள் ராணியை மாற்ற எறும்பு கூட்டம் நினைக்கும் போதோ அல்லது போட்டி ஏற்படும் போதோ) தங்கள் உடல்நிலையை இயல்பு நிலைக்கு மாற்றி கொள்ளவும் முடியும். லார்வாக்களின் கட்டத்திலிருந்தே ஒரு எறும்பு ஒரு தொழிலாளி அல்லது ராணியாக செயல்படுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. சரியான ஹார்மோன்கள் மற்றும் நன்கு வளர்க்கப்பட்ட உடலைக் கொண்ட ஒரு எறும்பே போட்டியின் போது ராணியாக தேர்வு செய்யப்படுகிறது. மற்ற எறும்புகள் வேலைக்கார எறும்புகளாக தங்கள் கடமைகளை தொடர்கின்றன.

Also read... ஜூம் மீட்டிங்கின் போது நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றி உறுப்பினர்களை அதிர்ச்சியடைய செய்த எம்.பி!

ராணி எறும்பின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து வாழும் எறும்புகளின் மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது, இந்திய ஜம்பிங் எறும்புகளின் குழுக்கள் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ்வதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கென்னசோ மாநில பல்கலைக்கழகத்தின் முதன்மை எழுத்தாளர் டாக்டர் கிளின்ட் பெனிச் கூறுகையில், "இந்திய ஜம்பிங் எறும்புகள் அடல்ட் நிலையில் கூட தங்களை முழுமையாக மாற்றியமைக்கும் திறனை கொண்டுள்ளன. நேவ் இந்த எறும்புகள் தொடர்பான ஆராய்ச்சிகளை இது சுவாரஸியமாக்குகிறது"என்று கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: