நடந்து கொண்டிருக்கும் இந்த 2021-ஆம் ஆண்டில் மெசேஜிங் சர்வீஸ் ஆப்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிக்கள் (emojis) பற்றிய புதிய அறிக்கையை unicode Consortium என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. எமோஜிக்கள் போன்ற உலகின் டிஜிட்டல் மொழிகளைக் கண்காணிக்கும் இந்த லாப நோக்கற்ற நிறுவனம், உலகின் சுமார் 92% ஆன்லைன் யூஸர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இந்த மினியேச்சர் டிஜிட்டல் ஐகான்களை (எமோஜிக்களை) பயன்படுத்துகின்றனர் என்று கூறுகிறது.
2021-ஆம் ஆண்டு முழுவதும் எந்தெந்த எமோஜிக்ககள் அதிகம் பயன்படுத்தப்பட்டன என்ற இந்த நிறுவனத்தின் தரவுகளின் படி, டியர்ஸ் ஆஃப் ஜாய் எமோஜி (Tears of joy emoji) அதாவது கண்ணீருடன் சிரிக்கும் எமோஜி மற்ற அனைத்து எமோஜிக்களை விட அதிகமாக பயன்படுத்தப்படுவதாக மற்றும் மிக பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த Tears of joy emoji-யானது பயன்படுத்தப்பட்ட அனைத்து எமோஜிக்களிலும் 5%-க்கும் அதிகமாக உள்ளது. இதை தொடர்ந்து ரீட் ஹார்ட் (read heart) எமோஜி இரண்டாம் இடத்தில் உள்ளது.
மூன்றாம் இடத்தில் ரோலிங் ஆன் ஃப்ளோர் லாஃபிங் (rolling on the floor laughing), நான்காம் இடத்தில தம்ஸ் அப் (thumbs up) இதை தொடர்ந்து ஐந்தாவது இடத்தை லவுட்லி க்ரையிங் ஃபேஸ் (Loudly Crying Face) உள்ளிட்ட எமோஜிக்கள் பிடித்து உள்ளன. unicode Consortium அமைப்பு கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான பிரபல எமோஜிக்கள் பட்டியலை வெளியிடவில்லை.
என்றாலும் கூட எமோஜிபீடியாவின் தரவுகளின் படி, டியர்ஸ் ஆஃப் ஜாய் எமோஜி கடந்த ஆண்டும் மிகவும் பிரபலமான எமோஜியாக இருந்துள்ளது. இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிக்களை பற்றிய அறிக்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டை போலவே 'கூப்பிய கைகள்' (folded hands) எமோஜி ஆறாவது இடத்தில் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒன்பதாவது இடத்தில் இருந்த face blowing a kiss எமோஜி இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஏழாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. two hearts எமோஜி முதல் 10 எமோஜிக்களின் பட்டியலில் வரவில்லை. இந்த எமோஜி தற்போது பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கிறது.
இதற்கு பதில் smiling face with hearts எமோஜி எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து smiling face with heart -eyes எமோஜி 9-வது இடத்திலும், 10-வது இடத்தில் smiling face with smiling -eyes எமோஜியும் இருக்கின்றன. தற்போது 10-வது இடத்தில இருக்கும் smiling face with smiling -eyes, கடந்த 2019-ம் ஆண்டு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்துள்ளது.
முதல் 200 எமோஜிக்கள் பட்டியலில் பெரிய மாற்றங்கள் காணப்படுவதாக unicode Consortium குறிப்பிடுகிறது. முன்பு 113-வது இடத்தில் இருந்த 'birthday cake' எமோஜி தற்போது 25-வது இடத்திற்கும், 139-வது இடத்தில் இருந்த balloon எமோஜி 48-வது இடத்திற்கும், 97வது இடத்தில் இருந்த pleading face தற்போது 14-வது இடத்திற்கும் வந்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Emoji, YearEnder 2021