முறையான மழைநீர் சேகரிப்பால் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிய அபார்ட்மெண்ட்!

இயற்கையையும் அரசாங்கத்தையும் குறை சொல்லும் நாம், நீராதாரத்தை உருவாக்கவும், அவற்றை காப்பாற்றவும் அக்கறை எடுத்தால் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கலாம்.

முறையான மழைநீர் சேகரிப்பால் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிய அபார்ட்மெண்ட்!
முறையான மழைநீர் சேகரிப்பு
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
சென்னையே குடிநீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு அபார்ட்மெண்ட் வாசிகள் தண்ணீர் பஞ்சத்தின் சுவடே தெரியாமல் சுகமாக உள்ளனர். 

இரவு பகல் பாராமல் தண்ணீர் சேகரிப்பதையே பிரதானமாகக் கொண்டு சென்னையில் தெருக்கள் திருவிழா கோலமாக உள்ள நிலையில் அண்ணா நகரில் உள்ள மானசரோவர் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு தண்ணீர் பஞ்சமே கிடையாது.

மானசரோவர் என்ற பெயருக்கு ஏற்றார் போல், அந்த குடியிருப்புவாசிகளின் தாகம் தீர்க்கிறது அங்குள்ள கிணறு. இந்தக் குடியிருப்பில் இருக்கும் 7 குடும்பங்களுக்கும் போதுமான தண்ணீர் இந்த கிணற்றில் இருந்தே கிடைக்கிறது. சுமார் 25 அடி ஆழமுள்ள இந்தக் கிணறு எப்படி இவர்களின் தண்ணீர் தேவையை தீர்க்கிறது என்பதை பிரபாகரன் விவரிக்கிறார்.


சுமார் 25 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றின் நீர் ஆதாரமே அந்தக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்புதான். ஆம் அந்த குடியிருப்பில் முறையான மழைநீர் சேகரிக்கும் அமைப்பு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகமால் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது.

இதனால் ஆழ்துளை கிணறு கூட அமைக்காமல் இந்தக் கிணற்றில் இருந்து சமைக்கவும், குடிக்கவும் மற்ற பிற தேவைகளுக்குமான தண்ணீரை பெறுகிறார்கள். மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவிய 2009-ம் ஆண்டு கூட தாங்கள் தண்ணீருக்காக குடங்களை தூக்கவில்லை என்று இந்தக் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

இயற்கையையும் அரசாங்கத்தையும் குறை சொல்லும் நாம், நீராதாரத்தை உருவாக்கவும், அவற்றை காப்பாற்றவும் அக்கறை எடுத்தால் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றும் இந்த மக்கள் கூறுகின்றனர்.Also see... புதுச்சேரியில் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள ஊசுடு ஏரி!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading