ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் கண்களுக்கு சவால்... அணில்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

உங்கள் கண்களுக்கு சவால்... அணில்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

அணில்களுக்கு மத்தியில் மரத்தில் மறைந்திருக்கும் முதலை

அணில்களுக்கு மத்தியில் மரத்தில் மறைந்திருக்கும் முதலை

Optical Illusion | மரக்கிளைகள் மற்றும் அணில்கள் நிறைந்து காணப்படும் இந்த இமேஜில் மறைந்திருக்கும் ஒரு முதலையை கண்டுபிடிப்பதே இந்த ஆப்டிகல் இல்யூஷனின் சவால் ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல வகை வேடிக்கையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் அதிகம் வைரலாகின்றன. எனினும் வயது வித்தியாசம் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தரப்பினரையும் கவரும் வைரல் விஷயமாக இருந்து வருகின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள்.

கண்களை ஏமாற்றி மூளையை குழப்ப கூடிய புதிர்களுடன் இருப்பதால் ஆப்டிகல் இல்யூஷன்கள் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக பல ஆப்டிகல் இல்யூஷன்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. பார்வை கூர்மை மற்றும் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நம்மை கடுமையாக சோதித்தாலும் அது நமக்கு தரும் சுவாரஸ்யம் காரணமாக வைரலாகி விடுகின்றன.

மேலும் மூளை மற்றும் கண்களுக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் உணர வைக்கின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். ஒரு ஆப்டிகல் இல்யூஷனலில் மறைந்திருக்கும் விஷயங்களை ஒருவர் எத்தனை வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கிறோர்களோ அதைப் பொறுத்து விடுக்கப்படும் சவாலில் ஜெயிக்கலாம். என்றாலும் அவ்வப்போது ஆன்லைனில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்களுக்கான புதிரை அனைவராலும் எளிதில் கண்டறிந்து விட முடியாது. சில நேரங்களில் பலரால் கடைசி வரை விடையை கண்டறிய முடியாவிட்டாலும் அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விடையை கண்டறிய சவால் விடுகின்றனர்.

தற்போது இங்கே நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் சமீப நாட்களாக வைரலாகி வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷனில் இருக்கும் ஒரு மரத்தில் ஏராளமான அணில்கள் விளையாடுகின்றன. ஆனால் அணில்கள் ஓடியாடி விளையாடும் இதே மரத்தில் மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படும் முதலை ஒன்றும் இருக்கிறது. ஆனால் அந்த முதசாலை நம் கண்களுக்கு எளிதில் புலப்படாமல் ஒளிந்திருக்கிறது.

மரக்கிளைகள் மற்றும் அணில்கள் நிறைந்து காணப்படும் இந்த இமேஜில் மறைந்திருக்கும் ஒரு முதலையை கண்டுபிடிப்பதே இந்த ஆப்டிகல் இல்யூஷனின் சவால் ஆகும். அதுவும் மறைந்திருக்கும் முதலையை பத்தே வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷனை பார்த்து உங்களால் அதை கண்டுபிடிக்க முடியுமா..?

மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து நீங்கள் மறைந்திருக்கும் முதலையை 10 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உண்மையிலேயே உங்களுக்கு பருந்து கண்கள் தான். ஆனால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பிளாக் & ஒயிட்டில் இருப்பதன் காரணமாக பலரும் அந்த முதலையை கண்டுபிடிக்க முடியாமல் திணறியதாக சோஷியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Also Read : சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடுமா..! 9 இளம்பெண்களை திருமணம் செய்தவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

நீங்களும் இவர்களில் ஒருவர் என்றால் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தை தலைகீழாக திருப்பி பார்த்து மரத்தின் மைய பகுதியில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். ஏனென்றால் உண்மையில் இந்த புகைப்படத்தில் முதலை ஒரு கிளையில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறது. வலதுபுறம் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் மரத்தின் அடர்ந்த கிளையின் கீழ் இந்த முதலை தலைகீழாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே தான் இந்த புகைப்படத்தை நேராக வைத்து பார்த்தால் பலரால் முதலையை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. சரி, தலைகீழாக இமேஜை பார்த்தாவது முதலையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா.!! இல்லையென்றால் விடையை தெரிந்து கொள்ள கீழ் உள்ள சிவப்பு வட்டமிடப்பட்ட பதில் அடங்கிய புகைப்படத்தை பாருங்கள்.

First published:

Tags: Optical Illusion