ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

''ஹாய் சார்.. நான் தான் திருடன்’’ லேப்டாப் திருடிவிட்டு ஓனருக்கு மெயில் அனுப்பிய நபர்.. வைரல் போஸ்ட்!

''ஹாய் சார்.. நான் தான் திருடன்’’ லேப்டாப் திருடிவிட்டு ஓனருக்கு மெயில் அனுப்பிய நபர்.. வைரல் போஸ்ட்!

திருடிய நபர் அனுப்பிய இமெயில்

திருடிய நபர் அனுப்பிய இமெயில்

Trending | திருடர் அனுப்பிய மெயிலை பார்த்த லேப்டாப்-ஐ பறிகொடுத்த அந்த நபர், திருடன் தனக்கு அனுப்பிய இமெயிலை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் குழம்பிப்போனார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செய்யும் தொழிலில் நேர்மை இருந்தால் தான் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று, மென்மேலும் நாம் வளர முடியும். அதற்காக, திருட்டு தொழிலில் ஈடுபட்டிருப்பவரிடம் நேர்மை இருந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்கிறீர்களா? ஆமாம், பொருளை பறி கொடுத்து விட்டாலும், திருடனிடம் கொஞ்சம் நேர்மை இருந்தால் நமக்கு குறைந்தபட்ச பலன் கிடைக்கும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது இந்த செய்தி.

  உதாரணத்திற்கு நீங்கள் ஸ்மார்ட்ஃபோனை தொலைத்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அந்த ஃபோனின் மதிப்பைக் காட்டிலும், அதில் உள்ள டிஜிட்டல் ஆவணங்கள், ஃபைல்கள், தகவல்களும் சேர்ந்து போய் விட்டதே என்றெண்ணி தான் அதிகம் வருத்தம் கொள்வீர்கள்.

  கிளவுட் மெமரி அல்லது வேறு எந்த வகையில் பேக்-அப் செய்து வைத்திருக்காதவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஃபோன் போனால், போகிறது, அதில் உள்ள ஃபைல்கள் மட்டும் கிடைத்தால் போதும் என்பார்கள். அந்த அளவுக்கு டிஜிட்டல் சாதனங்களைக் காட்டிலும், அதில் நாம் சேமிக்கும் மதிப்புமிக்க தகவல்கள் தான் நமக்கு தேவையாக இருக்கிறது. இப்போது செய்திக்கு வருவோம்.

  Read More : கண்சிமிட்டி சிரித்ததா சூரியன்? திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? விளக்கமளித்த நாசா!

  லேப்டாப் திருடிய திருடன்

  டிவிட்டர் பயனாளர் ஒருவரின் லேப்டாப் அண்மையில் திருடு போயிருக்கிறது. இதனால், அதிர்ச்சியில் இருந்த அந்த நபருக்கு, திருடனிடம் இருந்து இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில், “நான் உங்கள் லேப்டாப்-ஐ நேற்றைய தினம் திருடி விட்டேன். மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் எனக்கு பணம் தேவைப்பட்டதால் நான் இவ்வாறு செய்து விட்டேன்.

  உங்கள் லேப்டாப்-ஐ ஆராய்ந்து பார்த்ததில், ஆய்வு ப்ராஜக்ட் ஒன்றில் நீங்கள் பிசியாக இருப்பது தெரிய வந்தது. அந்தக் கோப்புகளை இதனுடன் இணைத்துள்ளேன். அதேபோன்று உங்களுக்கு வேறு ஏதேனும் முக்கிய தகவல்கள் வேண்டும் என்றால் எனக்கு திங்கள்கிழமை 12:00 மணிக்குள் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால், எனக்கான அடுத்த வாடிக்கையாளரை நான் கண்டறிந்துவிட்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, திருடன் சாதூர்யமாக லேப்டாப் ஓனரின் அதே மெயில் ஐடியில் இருந்து, அதே ஐடிக்கே செய்தி அனுப்பியுள்ளார்.

  குழம்பிய லேப்டாப் ஓனர்

  லேப்டாப்-ஐ பறிகொடுத்த அந்த நபர், திருடன் தனக்கு அனுப்பிய இமெயிலை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் குழம்பிப்போனார். இந்த செய்தியையும், மனக் குழப்பம் குறித்தும் டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து, இந்தப் பதிவு டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது.

  சிலர் திருடினாலும், அந்த நபர் குறைந்தபட்ச நேர்மையுடன் செயல்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். உங்கள் லேப்டாப்-ஐ ஏன் நீங்களே வாங்கிக் கொள்வதாக திருடனிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று மற்றொரு யூசர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

  மற்றொரு டிவிட்டர் பயூசர்கள் பகிர்ந்து கொண்ட தகவலில், “ஒருமுறை திருடன் என்னிடம் இருந்து பர்ஸை பறித்து விட்டார். உடனடியாக அதில் இருந்த என்னுடைய லைசென்ஸ் மற்றும் சாவி போன்றவற்றை திருப்பிக் கொடுத்த அவர், டாக்ஸி பிடித்துச் செல்ல உங்களிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டார். நான் மிகுந்த குழப்பம் அடைந்து விட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral