ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

என்னது இந்த மரத்தை வெட்டினால் ரத்தம் கொட்டுமா..!! உண்மை என்ன தெரியுமா.?

என்னது இந்த மரத்தை வெட்டினால் ரத்தம் கொட்டுமா..!! உண்மை என்ன தெரியுமா.?

The tree's length can range from 33 to 39 feet

The tree's length can range from 33 to 39 feet

Dragon Blood Tree | நாம் தற்போது பார்த்து வரும் மரத்தை வெட்டும் போது இரத்தம் கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போலியானவை அல்ல, நிஜம் என்பது உறுதியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாக நம் நாட்டில் சில சமயங்களில் வேப்ப மரத்தில் இருந்து பால் வழிவதாக செய்திகள் தீயாய் பரவுவது உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் மரம் ஒன்றில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்த வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது மரத்தை வெட்டினால் அதிலிருந்து மனித இரத்தம் போன்ற அடர்த்தியான மற்றும் சிவப்பு நிற திரவம் வெளியேறும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இயற்கையின் சில அற்புதங்கள் நம்மை வியக்க தவறுவதில்லை. தற்போதெல்லாம் இயற்கையின் திகைப்பூட்டும் படங்களை நாம் சமூக தளங்களில் பார்க்கமுடிகிறது, ஆனால் இணையத்தில் போலி செய்திகள் பரவலாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் உண்மை எது, பொய் எது என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.

ஆனால் நாம் தற்போது பார்த்து வரும் மரத்தை வெட்டும் போது இரத்தம் கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போலியானவை அல்ல, நிஜம் என்பது உறுதியாகியுள்ளது. ஆம், ஏமனில் காணப்படும் இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், அதை வெட்டினால், சிவப்பு நிறத்தில் அடர்த்தியான திரவம் வெளியேறுகிறது, இது மரம் தன்னை வெட்டும் போது ரத்தக்கண்ணீர் சிந்தி அழுவது போன்ற தோற்றத்தை தருகிறது.

இந்த தனித்துவமான மரத்தின் பெயர் டிராகன் பிளட் ட்ரீ, அதாவது 'டிராகன் இரத்த மரம்' என்பதாகும். இது இயற்கையின் தனித்துவமான மரம், சாதாரண மரங்களைப் போல வளராமல் மாறாக சற்று தலைகீழாக வளரக்கூடியது. சகோட்டா தீவுகளில் காணப்படும் இந்த மரத்திற்கு மிகவும் குறைவான அளவு தண்ணீரே போதும். ஆனால் மரம் நன்றாக செழித்து வளர வேண்டும் என்றால் அதிக வெப்பம் தேவை. இதன் நீளம் 33 முதல் 39 அடி வரை இருக்கும். மேலும் இதன் ஆயுள் 650 ஆண்டுகள் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்..

இந்த மரங்கள் கீழே இருந்து முற்றிலும் தட்டையானவை மற்றும் அவற்றின் கிளைகள் மேல்நோக்கி ஏறும்போது தடிமனாக வளருகிறது. அதன் இலைகள் ஒரு குடை போன்ற வடிவத்தில் உள்ளன மற்றும் அவை மிகவும் அடர்த்தியானவை. இது தவிர, இந்த மரத்தின் மிகப்பெரிய அம்சம் சிவப்பு நிற பிசினை சுரப்பது ஆகும். நீங்கள் இந்த மரத்தை வெட்டினால், மனித ரத்தத்தை போன்ற திக்கான சிவப்பு நிற பிசின் வெளியேறுகிறது.

Also Read : தினமும் நூடுல்ஸ் மட்டுமே சமைச்சா எப்படி சார்..! கடுப்பான கணவன் எடுத்த தடாலடி முடிவு

இந்த இரத்த நிற பிசின் பற்றிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஏமனில் உள்ள மக்கள் இந்த திரவம் காய்ச்சல் முதல் புண்கள் வரையிலான நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்புகிறார்கள். முக்வா, முனிங்கா மற்றும் பிளட்வுட் மரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த மரத்தின் ரத்தத்தை, அதாவது ரத்த நிற பிசினை உள்ளூர் மக்கள் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட பயன்படுத்துக்கின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Tree plant, Trending