பிறந்த வீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்... சோகம் இல்லை ஹேப்பி...!

news18
Updated: September 7, 2019, 11:44 AM IST
பிறந்த வீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்... சோகம் இல்லை ஹேப்பி...!
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 7, 2019, 11:44 AM IST
திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண் ஒருவர், சோகம் மறந்து ஹேப்பியாக பாட்டுக்கு நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

பொதுவாக திருமணமாகி பிறந்து வளர்ந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்களை சோகம் வாட்டும். தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், உற்றார் - உறவினர்கள் என சிறு வயதில் இருந்து பழகிய அனைத்தையும் விட்டுவிட்டு புதிதாக ஒரு இடத்திற்கு இடம்பெயர்வதே அந்த சோகத்திற்கு காரணம்.

புதிய சூழலுக்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ளப்போகிறோம் என்ற பயமும் அவர்களை வாட்டியிருக்கும். ஆனால், இந்தக் கவலைகள் எதுவுமே இல்லாமல், எது நடந்தால் எனக்கென்ன நான் நானாகவே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிவருகின்றது.


மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெண் புகுந்த வீட்டுக்கு காரில் செல்லும் போது எடுத்த வீடியோதான் தற்போது அங்கு வைரல் ஹிட்டடித்து வருகிறது... அந்த வீடியோ கீழே...

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...