Home /News /trend /

வேலை வேண்டி கேக் பாக்சில் தனது வேலை விவரங்களை வைத்து டெலிவரி செய்த வினோத நபர்!

வேலை வேண்டி கேக் பாக்சில் தனது வேலை விவரங்களை வைத்து டெலிவரி செய்த வினோத நபர்!

ரெஸ்யூமை வழங்கிய அமன் கண்டேல்வால்

ரெஸ்யூமை வழங்கிய அமன் கண்டேல்வால்

Trending | புதுவித வழிகளை பயன்படுத்தி வேலையை வாங்கும் முயற்சிகளை சிலர் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரின் வைரல் செய்தியை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

  இன்றைய கால கட்டத்தில் ஒரு சரியான வேலை கிடைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைப்பது என்பது ஒரு பெரிய கனவாகவே இருந்து வருகிறது. சிலருக்கு வேலை கிடைத்தாலும் அது நிரந்தர வேலையாக இருப்பதில்லை. அதே போன்று பலருக்கும் வேலை கிடைக்காமல் இருந்தும் வருகிறது. வேலை இல்லாதவர்கள் பல நிறுவனங்களை அணுகுவதையே முதன்மையான செயலாக கொண்டிருப்பார்கள். இதில் தோல்வி அடைந்தால் அடுத்தாக பெரிய அளவில் ஈடுபாடுகளை செய்ய தயங்குவார்கள். ஆனால், இப்படியெல்லாம் செய்யாமல் புதுவித வழிகளை பயன்படுத்தி வேலையை வாங்கும் முயற்சிகளை சிலர் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரின் வைரல் செய்தியை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

  வேலை தேடுபவர்கள் முதலாளிகளின் கவனத்தை ஈர்க்க தனித்துவமான வழிகளை முயற்சிப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். லிங்க்ட் இன் முதல் இமெயில் வரை தனக்கான நல்ல வேலையை பெற, அசாதாரண அணுகுமுறைகளை ஒருசிலர் மேற்கொள்கின்றனர். இப்படியொரு முயற்சியை செய்த அமன் என்பவருக்கு தான் தான் ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. பெங்களுருவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சோமேடோ டெலிவரி பார்ட்னராக உடை அணிந்து, கேக் டப்பாவில் தனது ரெஸ்யூமை வழங்கிய அமன் கண்டேல்வால் என்கிற நபரின் முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த தனித்துவமான வழியை எப்படி இவர் முயற்சித்தார் என்பதை குறித்து அவரே கூறியுள்ளார்.

  "பெரும்பாலான ரெஸ்யூம்கள் குப்பையில்தான் போடப்படுகிறது. ஆனால் என்னுடைய ரெஸ்யூம் உங்கள் வயிற்றில் உள்ளது" என்று குறிப்பிட்டு பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்அப் ஒன்றில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வேலைக்காக அவர் இப்படி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவர் சோமேடோ டெலிவரி பார்ட்னராக மாறுவேடமிட்டு தனது விண்ணப்பத்தை வழங்கியதற்காக ஸ்டார்ட் அப்களின் பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் கேள்விகளை பலர் எழுப்பியுள்ளனர்.

  Read More : இந்த படத்தில் நீங்கள் எந்த முகங்களை முதலில் பார்த்தீர்கள் - உங்கள் ஆளுமையை தெரிந்துகொள்ளுங்கள்!


  பல ட்விட்டர் யூசர்கள் பணியிடத்தில் பாதுகாப்பு தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர். "இது எனக்கு மட்டும் தான் பயமாகவும் பைத்தியமாகவும் இருக்கிறதா? சோமேடோ/சவிக்கி-இன் டெலிவரி ஊழியராக மாறுவது அவ்வளவு எளிதானதா? இங்கே இவர்களின் பாதுகாப்பு வழிமுறைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார். "என்ன இப்படியெல்லாம் செய்கிறீர்கள். வேலை தேடுவதற்கு என்று ஒரு வரையறை உண்டு" என்று மற்றொரு ட்விட்டர் யூசர்கள் தெரிவித்துள்ளார். "இது பாதுகாப்பு அணுகுமுறையை கேள்விக்குறியாக மாற்றுகிறது. சாதாரணமாக இருந்தாலும் ஒருவர் எளிதாக அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடிகிறது,” என்று மற்றொரு யூசர் கூறியுள்ளார்.

  இந்த சம்பவம் குறித்து சோமேடோ நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மற்ற நிறுவனங்கள் காட்டமான பதில்களுடன் இந்த சம்பவத்தில் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றனர். உதாரணமாக, Dunzo செயலி இந்த நிகழ்வு குறித்து, "இந்த இனிமையான செயல் நிச்சயமாக உங்களை உயர்த்தும்! உங்கள் விண்ணப்பத்திற்கு ஆல் தி பெஸ்ட்" என்று குறிப்பிட்டுள்ளது.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral

  அடுத்த செய்தி