ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோலி டூ பாண்டியா.. கலாய்த்தெடுத்த ஸ்டாண்ட்-அப் காமெடியன்.. வைரலாகும் வீடியோ!

கோலி டூ பாண்டியா.. கலாய்த்தெடுத்த ஸ்டாண்ட்-அப் காமெடியன்.. வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷகிப் அல் ஹசன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், தினேஷ் கார்த்திக் மற்றும் இன்னும் சிலரிடமும் பேசி கலாய்த்த வண்ணம் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவின் ஸ்டாண்ட்-அப் காமெடியன் டேனிஷ் சைட், விராட் கோலி மற்றும் பிற கிரிக்கெட் வீரர்களிடம் செய்தி நிரூபர் போல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்ததை கேட்டு வேடிக்கையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  இந்தியாவின் ஸ்டாண்ட்-அப் காமெடியன், டேனிஷ் சைட் மீண்டும் ஐசிசி மெகா நிகழ்வான டி20 உலகக் கோப்பை 2022 இல் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்து ரசிகர்களுக்காக வேடிக்கையான வீடியோவை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் தற்போது கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தருணத்தில் அப்வர்களுடனான இந்த காமெடி வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  பங்களாதேஷின் புகழ்பெற்ற நாகின் நடனம் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் மூலம் வைரலான "கார்கே ஆயா" போன்று மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்த அனைத்தையும் டேனிஷ் சைட் கலாய்க்கும் வண்ணம் காமெடியாக பேசியுள்ளார்.

  Read More : அம்மா என் சாக்லேட்ட திருடுறாங்க.. கேட்டா அடிக்கிறாங்க - கியூட்டாக போலீசில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன்

  மேலும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷகிப் அல் ஹசன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், தினேஷ் கார்த்திக் மற்றும் இன்னும் சிலரிடமும் பேசி கலாய்த்த வண்ணம் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Danish sait (@danishsait)  உலக அளவில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் எதிர்ப்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த சமயத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களால் ஆர்வமாக பார்க்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோ பதிவிற்கு விராட்கோலி முதல் நிறைய பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். லைக்குகளையும் குவித்த வண்ணம் உள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: T20, Trending, Viral Video, Virat Kohli