ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கெத்தாக படமெடுத்து நிற்கும் பாம்பு.. சவால் விட்ட அதிகாரி - வைரலாகும் ட்வீட்

கெத்தாக படமெடுத்து நிற்கும் பாம்பு.. சவால் விட்ட அதிகாரி - வைரலாகும் ட்வீட்

வைரலான ட்விட்!

வைரலான ட்விட்!

சவால் ட்விட்டை பார்த்த பல யூஸர்கள் வேடிக்கையான பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டனர். அதே சமயம் சில யூஸர்கள் குழப்பத்தில் பல தவறான இனத்தை குறிப்பிட்டார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பலருக்கும் பாம்பு என்று சொன்னாலே பயம் தொற்றி கொள்ளும்.பல வகையான பாம்புகள் காடுகளில் மறைந்துள்ளன. இலை போல தோற்றம், கண்ணாடி போல பளபளப்பான தோற்றம் மற்றும் கரடு முரடான தோற்றம் என்று விதவிதமான பாம்புகள் நம்முடன் இந்த பூமியில் வசிக்கின்றன.

  ஒரு சில பாம்புகள் லேசாக தீண்டினாலே உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். அது போன்ற ஒரு ஆபத்தான பாம்பின் ஃபோட்டோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ஆபத்தான பாம்பின் சரியான பெயரை யூகித்து சொல்ல நெட்டிசன்களுக்கு சவாலும் விடுக்கப்பட்டது. இதனால் அந்த ட்விட் மேலும் வைரலானது. பாம்பின் ஃபோட்டோவை ட்விட் செய்து சவால் விடுத்தவர் பிரபல இந்திய வன சேவை (IFS) அதிகாரியான பிரவீன் கஸ்வான் ஆவார்.

  வனவிலங்குகளைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை போஸ்ட் செய்வதன் மூலம் பிரவீன் கஸ்வான் எப்போதும் தான் ஆக்டிவாக இருப்பதுடன், தனது ஃபாலோயர்ஸையும் ஆக்டிவாக வைத்திருப்பார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் ஒரு பாம்பின் ஃபோட்டோவை ஷேர் செய்து, அது எந்த இனத்தை சேர்ந்த பாம்பு என்று யூகிக்குமாறு நெட்டிசன்களை கேட்டு கொண்டார்.

  Read More : உயிரோடு கல்லறைக்குள் போக ரூ.47 லட்சம்.. இப்படியும் ஒரு தெரபி!

  "அழகிய உயிரினம்.! யார் இதன் இனத்தை யூகிக்கிறீர்கள் என்று பார்ப்போம்" என்று கேப்ஷன் கொடுத்து அருகில் பச்சை புதர்கள் இருக்க தரிசு நிலத்தில் கெத்தாக நின்றிருக்கும் ஒரு பெரிய பாம்பின் ஃபோட்டோவை ஷேர் செய்தார்.

  அவரது இந்த சவால் ட்விட்டை பார்த்த பல யூஸர்கள் வேடிக்கையான பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டனர். அதே சமயம் சில யூஸர்கள் குழப்பத்தில் பல தவறான இனத்தை குறிப்பிட்டார்கள். ஒரு சில யூஸர்கள் இது கிரேட் இந்தியன் கோப்ரா என்று கூறினர், இன்னும் சிலர் கட்டுவிரியன் (common krait) என்றும் கமெண்ட் செய்தனர். சைட்-ஆங்கிளில் இந்த பாம்பின் ஃபோட்டோ எடுக்கப்பட்டுள்ளதால் கண்டுபிடிக்க சற்று குழப்பமாக உள்ளதாக சில யூஸர்கள் தெரிவித்தனர்.

  ஆனால் தங்களுக்கு தெரிந்த வரை இந்த பாம்பின் இனம் 'கிங் கோப்ரா' என்று பல யூஸர்கள் குறிப்பிட்டனர். நெட்டிசன்கள் மாறி மாறி அந்த பாம்பின் வகை இது தான் என்று குழப்பி கட்டிய நிலையில், இறுதியாக ஒருகட்டத்தில் அதற்கான பதிலை IFS அதிகாரியான பிரவீன் கஸ்வான் வெளியிட்டார். இந்த ஃபோட்டோ உண்மையில் உலகின் மிக நச்சு பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் "கிங் கோப்ரா" பாம்புடையது என்று குறிப்பிட்டு, ஒரு கிங் கோப்ரா மற்றொரு பாம்பை விழுங்கும் ஸ்டில் ஒன்றையும் ஷேர் செய்திருக்கிறார்.

  மேலும் கிங் கோப்ராவின் அறிவியல் பெயரான "ஓபியோபகஸ் ஹன்னா" (Ophiophagus hannah) என்பது கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறினார். ஓபியோபகஸ் என்பது கிரேக்கச் சொல்லாகும், இது "பாம்பை உண்ணுதல்" என்று பொருள்படும், மேலும் "ஹன்னா" என்பது கிரேக்க புராணங்களில் ஒரு மரத்தில் வாழும் நிம்ஃபின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral