ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கார் தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி - ரூ.20 ஆயிரம் செலுத்த ஊபர் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

கார் தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி - ரூ.20 ஆயிரம் செலுத்த ஊபர் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

 Uber

Uber

நம்மைப் போல சாமானியராக இருந்தால், அதை கசப்பான அனுபவமாகக் கருதி பிரச்சினையை அத்துடன் கைவிட்டிருப்போம். ஆனால், வழக்கறிஞரான கவிதா இந்த விவகாரம் குறித்து, தானே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நேரம் எவ்வளவு பொன்னானது என்பது நாம் அவசர, அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் சமயங்களிலும், குறிப்பாக ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போதும் தெரிய வரும். சாதாரண ஆம்னி பேருந்துகள் என்றால், 10, 15 நிமிடம் தாமதமானாலும் கூட, சில சமயம் நமக்காக காத்திருந்து அழைத்துச் செல்வார்கள்.

  ஆனால், ரயில் பயணங்களும், விமானப் பயணங்களும் அப்படி அமையாது. ஒரு நிமிட தாமதம் கூட நம் பயணத்தை கைவிட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடும். அந்த பயணத்தின் வாயிலாக, செய்து முடிப்பதாக நாம் திட்டமிட்டிருந்த அத்தனை காரியங்களும் வீணாகிவிடும். சில சமயம், டிக்கெட் இழப்பு மட்டுமல்லாமல் பெரும் பொருளாதார இழப்புகள் கூட ஏற்படும்.

  எல்லாம் சரிதான், பயணத்திற்கான தாமதத்திற்கு நாம் தான் காரணம் என்றால் கூட, நம் மனது சமாதானம் அடைந்து விடும். ஆனால், அதற்கு வேறொரு நபர் காரணம் என்றால், சும்மா விட்டுவிடுவோமா! அதுவும் சரியான நேரத்தில் நாம் விரும்பிய இடத்திற்கு கொண்டு சென்று விட வேண்டிய வாடகை கார் சேவைதாரர்கள், வேண்டுமென்றே கால தாமதம் செய்தால் நம் மனம் பொறுக்குமா என்ன! அப்படியொரு நிகழ்வுதான் மும்பையில் நடைபெற்றுள்ளது.

  Read More : காரில் உற்சாகமாக அமர்ந்து செல்லும் ஏலியன்..? - கூகுள் எர்த் செயலில் பதிவானதாக பெண் வெளியிட்ட புகைப்படம் வைரல்...

  மகாராஷ்டிரா மாநிலம், டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா சர்மா. வழக்கறிஞரான இந்தப் பெண், கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், அவருக்கான விமானம் மாலை 5.50 மணியளவில் புறப்படுவதாக இருந்தது.

  கவிதாவின் வீட்டில் இருந்து, எவ்வளவுதான் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டாலும் கூட, விமான நிலையத்திற்குச் செல்ல அதிகப்பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். இந்த நிலையில், மாலை 3.29 மணியளவில், ஊபர் நிறுவனத்தின் கார் சேவையை அவர் புக்கிங் செய்தார்.

  ஆனால், கார் ஓட்டுநர் சட்டென்று வந்து சேரவில்லை. பலமுறை செல்ஃபோனில் அழைத்துப் பேசிய பிறகு, ஒரு வழியாக 14 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தார். இதைத் தொடர்ந்து, கவிதாவை ஏற்றிக் கொண்ட அவர், சரியான வழித்தடத்தில் நேராக விமான நிலையம் நோக்கி சென்றிருந்தால் கூட எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

  ஆனால், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கக் கூடிய தன்னுடைய காருக்கு, எரிவாயு நிரப்புவதற்காக மாற்று திசையில் அவர் பயணிக்க தொடங்கினார். அந்தப் பணியை முடித்துக் கொண்டு விமான நிலையம் செல்ல மாலை 5.23 மணி ஆகிவிட்டது. இதனால், கவிதா விமானத்தை தவறவிட்டார்.

  கூடுதலாக பணம் வசூலித்த ஊபர்

  ஏற்கனவே விமானப் பயணத்தை தவறவிட்ட கடுப்பில் இருந்த கவிதாவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது ஊபர் நிறுவனம். அதாவது, அவரது பயணத்திற்கான உத்தேச கட்டணம் ரூ.563 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாற்று வழியில் பயணம் செய்ததற்கும் சேர்த்து ரூ.703 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.

  தனக்கு நேர்ந்த துரதிருஷ்டமான அனுபவம் குறித்து ஊபர் நிறுவனத்திடம் கவிதா புகார் அளித்தார். சரி, போனால் போகிறது என்று கூடுதலாக வசூலித்த கட்டணத்தை மட்டும் அந்நிறுவனம் திருப்பி வழங்கியது.

  வழக்கு தொடர்ந்த கவிதா

  நம்மைப் போல சாமானியராக இருந்தால், அதை கசப்பான அனுபவமாகக் கருதி பிரச்சினையை அத்துடன் கைவிட்டிருப்போம். ஆனால், வழக்கறிஞரான கவிதா இந்த விவகாரம் குறித்து, தானே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகால விசாரணைப் பிறகு, கவிதாவுக்கு ஊபர் நிறுவனம் சார்பில் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  இதில், பாதியளவு பணம் கவிதாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாகவும், இன்னொரு பாதி பணம் வழக்கு செலவுகளுக்கு ஈடாகவும் அமையும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral