Home /News /trend /

மது குடிப்பதை எப்படி அதிகப்படுத்துவது? ஜப்பானின் அடுத்த அதிர்ச்சி ஐடியா

மது குடிப்பதை எப்படி அதிகப்படுத்துவது? ஜப்பானின் அடுத்த அதிர்ச்சி ஐடியா

இளைஞர்களை மது குடிக்கச் சொல்லும் ஜப்பான் அரசு

இளைஞர்களை மது குடிக்கச் சொல்லும் ஜப்பான் அரசு

ஜப்பான் அரசு இந்த மாதிரி நாட்டு மக்களை அதிகம் குடிக்க வைக்க முயற்சிக்க காரணம் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்தது தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaJapan Japan
    ஜப்பான் நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்த புது விதமாக இளைஞர்களை எப்படி மது குடிக்க வைப்பது குறித்துச் சொல்லச்சொல்லி போட்டி அறிவிக்கப்பட்டதுள்ளது.

    ஜப்பானின் தேசிய வரி நிறுவனம் "சேக் விவா" என்ற போட்டியை அறிவித்தனர். அதில் இளைஞர்களை அதிகம் மது குடிக்க வைக்க புதிய ஐடியாக்களை கேட்டுள்ளனர். இந்த போட்டி தேசிய வரி நிறுவனம் மது விற்பனையை அதிகரிக்கத் தொடங்கிய பிரச்சாரத்தின் ஒரு பங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. மதுவினால் விளையும் கேடுகளை அரசே விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி தற்போது மது குடிக்கச் சொல்லுவது ஏற்கக் கூடியதாக இல்லை என்று மக்களிடையே பரபரப்பு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

    ஜப்பான் அரசு இந்த மாதிரி நாட்டு மக்களை அதிகம் குடிக்க வைக்க முயற்சிக்க காரணம் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்தது தான். ஜப்பான் நாட்டில் பல்வேறு காரணங்களால் குடிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பிறப்பு விகிதம் குறைவு, வயதானவர்கள் தொகை அதிகரிப்பது மற்றும் கொரோனாவால் தினசரி வாழ்க்கைமுறை மாற்றம் பெற்றது போன்றவை மது விற்பனையை வெகுவாக குறைத்துள்ளது.

    Also Read : ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்... அதிரடி காட்டிய போலீஸ்! வைரலாகும் வீடியோ..

    இதனில் அரசு நிதி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் குறைக்கும் வகையாக இப்படியொரு போட்டியை அறிவித்துள்ளனர். இது குறித்து ஜப்பான் அரசு "சேக் விவா" பிரச்சார இணையத்தளத்தில், மது விற்பனை அதிகரிக்க புதிய சேவைகள், தயாரிப்புகள், வடிவமைப்புகள், அல்லது விஸ்கி, ஷோச்ஜூ, பீர் மற்றும் ஒயின் விற்பனையை அதிகரிக்க கிரேட்டிவ்வான பரிந்துரைகள் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    2021ம் ஆண்டு வரி வசூலிப்பு தகவலின் படி ஜப்பான் அரசுக்கு 8.1 பில்லியின் டாலர் வருமானம் மது விற்பனை மற்றும் அதற்கு தொடர்புடையதில் இருந்து கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சுகாதாரத் துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படி 20'கள் வயதில் இருக்கும் 29.4 சதவீதம் இளைஞர்கள் மது குடிப்பது இல்லை. மேலும் 26.5 சதவீதம் பேர் எப்பாயாவது தான் மது குடிக்கின்றனர் என்று கண்டறியப்பட்டது.

    ஆனால் பொருளாதாரத்தை உயர்த்த ஜப்பான் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் மக்கள் அரசு மேல் வருத்தம் அடைத்துள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Alcohol consumption, Japan, Youngster

    அடுத்த செய்தி