ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நேரம் சரியில்லை, ஜெயிலுக்கு போற மாதிரி இருக்கும் என்று ஜோதிடர் சொன்னால் கவலை வேண்டாம்!

நேரம் சரியில்லை, ஜெயிலுக்கு போற மாதிரி இருக்கும் என்று ஜோதிடர் சொன்னால் கவலை வேண்டாம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Trending | உங்கள் ஜாதகத்தில் கிரகம் சரியில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற தோஷத்தில் இருந்து தப்ப முடியாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரா நீங்கள்? உங்கள் ஜாதகத்தில் இந்த தோஷம் இருக்கிறது என்று கூறும் ஜோதிடர், அதற்கான பரிகாரத்தையும் கூறுவார் அல்லவா? ஆனால், அதையும் மீறி கட்டாயம் சிறைக்கு செல்ல வேண்டிய வகையில் உங்கள் ஜாதகம் அமைந்திருக்கிறது என்றால் என்ன செய்வது? கவலை வேண்டாம். உங்களுக்கான தீர்வு இந்த செய்தியில் இருக்கிறது.

  நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி, நடிகை ஜோதிமயி உள்ளிட்டோர் நடித்த தலைநகரம் திரைப்படத்தில், நடிகர் வடிவேலு போலீஸ் ஜீப்பில் ஏறிக் கொண்டு, “ஏ எல்லாம் நல்லா பார்த்துக்க, நா ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்’’ என்று விளம்பரம் செய்தபடி கிளம்பிச் செல்வார் நினைவிருக்கிறதா?

  அதுபோல நீங்களும் இனி சிறைக்கு செல்வதாக பெருமையுடன் சொல்லிக் கொண்டு செல்லலாம். குற்றம் செய்பவர்கள் தண்டனை அனுபவிக்கும் இடத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும் என்று பதற்றம் அடையாதீர்கள்.

  Read More : என்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை.. கண்டுபிடித்து கொடுங்கள் என விளம்பரம் வெளியிட்ட நபர்

  இந்த ஜெயில் பயணம் தண்டனையாக அமையாது. இது ஒரு சுற்றுலா போல இருக்கும். ஆம், உத்தகரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வாணி என்ற சிறைச்சாலையில் பொதுமக்கள் சிறைக்கு வந்து தங்கும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருந்தினர்களை சிறையில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வந்ததன் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  இதன்படி யார் வேண்டுமானாலும், ரூ.500 கட்டணம் செலுத்தி ஹல்த்வாணி சிறையில் ஒருநாள் இரவு தங்கலாம். இந்த சிறை கடந்த 1903ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனுள் பணியாளர்களுக்கான 6 குடியிருப்புகள் உள்ளன. தற்போது சிறை விருந்தினர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று இந்த சிறையின் துணை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா தெரிவித்துள்ளார்.

  சிறையில் தங்க விரும்பும் விருந்தினர்களுக்கு சிறைக் கைதிகளைப் போன்ற சீருடை மற்றும் சிறையின் சமையல் அறையில் தயார் செய்யப்படும் உணவு ஆகியவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

  ஜோதிடர்கள் சொல்லும் பரிந்துரைகள்

  விருந்தினர்களுக்கு சிறையில் அனுமதி அளிக்கப்பட இருப்பது குறித்த செய்தி அறிந்ததும் அதற்கு தகுந்தாற்போல ஜோதிடர்களும் ஆலோசனை சொல்லத் தொடங்கியுள்ளனர். அதாவது, “உங்கள் ஜாதகத்தில் கிரகம் சரியில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற தோஷத்தில் இருந்து தப்ப முடியாது. ஆகவே, சாதாரணமாக ரூ.500 செலுத்தி ஒருநாள் இரவு சிறைக்கு சென்று வந்துவிட்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும்’’ என்று அறிவுறுத்துகின்றனராம்.

  மற்றவர்களுக்கும் வாய்ப்பு

  சிறை சுற்றுலாவிற்கு செல்ல ஜாதகம் சரியில்லாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரணமாக திரைப்படங்களில் மட்டுமே சிறையை பார்த்து பழகிய நமக்கு, அங்கு தங்கும் அனுபவம் எப்படி இருக்கும்? உணவு மற்றும் பிற வசதிகள் எப்படி எனத் தெரிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Andhra Pradesh, Jail, Trending, Viral