நட்பு என்பது மிக அழகான பந்தமாகும். நல்ல நண்பனை சம்பாதித்தவன் தான் இந்த உலகின் பெரிய பணக்காரன் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி, சோகமான தருணம் எதுவானாலும் பகிர்ந்து கொள்ள, நண்பர்கள் நமக்கு தேவை. இந்த அழகான பிணைப்பைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச நட்பு தினம் ஜூலை 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
வாழ்க்கையில் நாம் எத்தனை இடங்களுக்கு மாறினாலும், எவ்வளவு வளர்ந்தாலும், எவ்வளவு படித்தாலும், வேலைக்கு சென்றாலும் , எத்தனை சாதனைகள் செய்தாலும் நம்மை அவர்கள் பார்த்த அதே நிலையில், பாசத்துடன் நடத்தும் மக்கள் நண்பர்கள் தான். அந்த உறவைக் கொண்டாடும் தினம் தான் இது.
நட்பு தினத்தின் வரலாறு
நண்பர்கள் தினம் 1930 களில் இருந்து ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1930 களில், ஹால்மார்க் கார்டுகளின் நிறுவனர் - ஜாய்ஸ் ஹால் நண்பர்கள் தினம் என்ற தினத்தைத் தொடங்கினார். அன்று மக்கள் தங்கள் நண்பர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மீண்டும் 1958 ஆம் ஆண்டில், பராகுவேயில் பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையில் அமைதியான உறவுகளை வளர்ப்பதற்காக 'உலக நட்பு அறப்போர்' என்ற சர்வதேச சிவில் அமைப்பால் இந்த நாள் முன்மொழியப்பட்டது. 1988 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் 'வின்னி தி பூஹ்' நட்புக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
மீன்பிடி வலையில் கிரிக்கெட் பயிற்சி.. ராகுல் காந்தியால் பாராட்டப்பட்ட ராஜஸ்தான் சிறுவனுக்கு அரசு சார்பில் பயிற்சி
அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 27, 2011 அன்று, அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் 65வது பொதுச் சபை, ஜூலை 30 ஐ அதிகாரப்பூர்வ சர்வதேச நட்பு தினமாக அறிவித்தது.
இருப்பினும், இந்த சிறப்பு நாள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவும் மலேசியாவும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினத்தைக் கொண்டாடுகின்றன. அதே சமயம் ஓஹியோவின் ஓபர்லினில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9 ஆம் தேதியை கொண்டாடுகிறார்கள்.
சர்வதேச நட்பு தினத்தின் முக்கியத்துவம்
நட்பு தினம் என்பது மனிதர்களுக்கு இடையேயான நட்புறவின் ஒரு கொண்டாட்டமாகும். குடும்பத்தைப் போலவே நெருக்கமாக இருக்கும் நண்பர்களை விவரிக்க பலர் 'குடும்பத்தைப் போன்ற நண்பர்கள்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சொற்றொடர் மிகவும் நேசித்த மற்றும் அன்பான நண்பர்களுக்கு பாராட்டுக்களைக் காட்ட உணர்வுகளின் வெளிப்பாடாகும்.
இந்திய இலக்கியங்களைப் பார்த்தால், அதியன்-ஔவை, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், கிருஷ்ணன்-அர்ஜுனன், கிருஷ்ணன் - சுதாமா, கிருஷ்ணன்-திரௌபதி, கர்ணன்- துரியோதனன் இடையிலான சிறந்த நட்பை நாம் கொண்டாடுகிறோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.