முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சித்த பிரமை பிடித்தது போல் அலறி துடித்து கதறி அழுத பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

சித்த பிரமை பிடித்தது போல் அலறி துடித்து கதறி அழுத பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

தரையில் உருண்டு கதறி அழும் மாணவிகள்

தரையில் உருண்டு கதறி அழும் மாணவிகள்

Mass Hysteria: பள்ளியில் மாணவிகள் வித்தியாசமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttarakhand (Uttaranchal) | India

பள்ளி மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் அலறியும் தரையில் உருண்டு கதறி அழும் காணொளி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி மாணவிகள் நடந்துகொள்ள அங்கு என்னதான் நடந்தது என்று தெரியாமல் இணையத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் ரைக்குழி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில்  மாணவிகள் திடீரென அலறியும், கத்தியும் வித்தியாசமாக நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் காணொளியாக இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் பல மாணவிகள் ஆவேசத்துடன் தரையில் விழுந்து உருண்டு கதறி அழும் காட்சிகள் பதிவாகியுள்ளது.  மாணவிகளின் செயலால்  அங்கிருந்த ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி ஆசிரியர்கள் தெரிவிக்கையில் மாணவிகள் திடீரென அலறி கத்த தொடங்கினார்கள். அவர்களே தலையைச் சுவரில் முட்டிக்கொள்ள முயன்றார்கள். இதனைக் கண்டு பயந்து நடந்த சம்பவத்தைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். மேலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது என்றார்கள்.

இது ஏதோ அமானுஷ்யமாகத் தெரிகிறது என்று கருதிய ஆசிரியர்கள் உள்ளூர் சாமியாரை வர வைத்து மாந்திரீகம் செய்ய வைத்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவம் முதல் முறை நடந்தது இல்லை. அதற்கு முந்தைய நாட்களில் கூட இதே மாறி மாணவ மாணவியர்கள் நடந்துகொண்டுள்ளனர். சாமியார் வந்து பூஜை செய்த பின்னர் தான் நிலைமை கட்டுக்குள் வந்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

மாநிலத்தின் கல்வித் துறையையே அதிரவைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.  இந்த நிலையில் அந்த பகுதியில் மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களான அல்மோரா, பித்தோராகர் மற்றும் சாமோலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

First published:

Tags: Girl students, School students