Home /News /trend /

இந்த பிரபலமான சிற்பத்தில் உங்களுக்கு முதலில் தோன்றும் உருவம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்தும்!

இந்த பிரபலமான சிற்பத்தில் உங்களுக்கு முதலில் தோன்றும் உருவம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்தும்!

உலகின் மிகப் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்று நமது தமிழ்நாட்டின் ஐராவதேஸ்வரர் கோவிலில் 900 ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்று நமது தமிழ்நாட்டின் ஐராவதேஸ்வரர் கோவிலில் 900 ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கப்பட்டுள்ளது.

Optical Illusion | நமது மூளை எந்த அளவிற்கு திறனாக உள்ளது என்பதை சில வேடிக்கையான பரிசோதனைகள் மூலம் கூட நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதில் ஒன்று தான் படங்களில் உள்ள உருவங்களை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்பதை கண்டறியும் முறை.

    மனித மூளையானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. மனித மூளையின் செயல்பாடுகளை வைத்து செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை இன்றைய கால கட்டத்தில் உருவாக்கி வந்தாலும், அவை மனித மூளையின் செயல்பாட்டிற்கு ஈடாகாது. மூளையின் திறன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய கூடியவராக இருப்பார்கள்.

    அதே போன்று ஒரு சிலர் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்ய கூடிய திறன் படைத்தவராக இருப்பார்கள். நமது மூளை எந்த அளவிற்கு திறனாக உள்ளது என்பதை சில வேடிக்கையான பரிசோதனைகள் மூலம் கூட நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதில் ஒன்று தான் படங்களில் உள்ள உருவங்களை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்பதை கண்டறியும் முறை. பொதுவாக இவற்றை ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள்.

    Read More : குதிரை எந்த திசையில் நடப்பது போல் தெரிகிறது? இதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கூறலாம்..


    தமிழில் ஒளியியல் மாயை என்று கூறப்படுகிறது. இதை வைத்து ஒருவரின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும். அதே போன்று ஒருவரின் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் இந்த சோதனையை மேற்கொள்ள இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். இதுவும் ஒரு வகையான ஆப்டிகல் இலுஷன் வகையை சேர்ந்த படமாகும். இது தாராசுரத்தில் இந்த படத்தை ஒரு முறை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.

    இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரத்தில் அமைந்துள்ள ஐராவதேசுவரர் கோயிலில் உள்ள பழமை வாய்ந்த சிற்பமாகும். அந்த காலத்திலேயே ஒளியியல் மாயை என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த படம் இருந்துள்ளது. உலகின் மிகப் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்று நமது தமிழ்நாட்டின் ஐராவதேஸ்வரர் கோவிலில் 900 ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சோழர்களின் கட்டிடக்கலைகளில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.



    இந்த சிற்பத்தில், ஒரு காளை மற்றும் ஒரு யானை ஒரே தலையைப் பகிர்ந்து கொள்வதை போன்ற தோற்றத்தை காணலாம். இடதுபுறத்தில் உள்ள விலங்கின் உடல் மற்றும் கால்களை அகற்றினால், பின்னால் வலதுபுறம் உள்ள உயிரினம் யானை போல் தெரியும். ஆனால் யானையின் உடல் மற்றும் கால்களை தவிர்த்து பார்த்தால், அதில் காளையின் உருவம் தெரியும். இதில் உங்களுக்கு முதலில் தோன்றும் உருவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியும்.

    காளை உருவம் :

    நீங்கள் முதலில் இந்த சிற்பத்தை பார்க்கும் போது, உங்களுக்கு காளை உருவம் தோன்றினால், நீங்கள் பிடிவாத குணம் கொண்டவராகவும், மூர்க்க தானம் உடையவராகவும் இருப்பீர்கள். மேலும் பல நேரங்களில் வலுவாகவும் நேர்மறையாகவும் இருப்பது எப்படி என்பது பற்றி உங்களுக்குத் தெரியும். இது தான் உங்களது குணமாக இருக்கும்.

    யானை உருவம் :

    இந்த சிரத்தில் உங்களுக்கு முதலில் யானை உருவத்தை பார்த்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நீங்கள் விசுவாசமாகவும் மரியாதையுடனும் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் நீங்கள் நல்ல சிந்தனையுடனும், அதிக அக்கறையுடனும் உள்ளதை இது உணர்த்துகிறது. மற்றவர்களுடம் அன்புடனும் மரியாதையுடனும் நீங்கள் நடந்து கொள்வீர்கள்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Entertainment, Optical Illusion, Tanjore

    அடுத்த செய்தி