Home /News /trend /

ஒரே நேரத்தில் இத்தனை வியாதியா? ரத்தப் பரிசோதனை செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

ஒரே நேரத்தில் இத்தனை வியாதியா? ரத்தப் பரிசோதனை செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

ஒரே நேரத்தில் மூன்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்

ஒரே நேரத்தில் மூன்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்

Trending | 36 வயது நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரே நேரத்தில் 3 நோய்களுக்கான முடிவு ‘பாசிட்டிவ்’ என வந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • interna, Indiaitalyitalyitaly
    2020ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த கொரோனாவின் கோரதாண்டவம் தற்போது படிப்படியாக குறைந்திருந்தாலும், இன்னும் சில நாடுகளில் அதன் தாக்கம் காணப்படுகிறது. கொரோனா காட்டிய மரண பயத்தால் சாதாரண காய்ச்சல் வந்தால் கூட உடனே பரிசோதனை செய்து பார்க்கும் அளவிற்கு மக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்படித்தான் இத்தாலியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து சில பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி என மூன்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இத்தாலியைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவர், கடந்த ஜூன் மாதம் ஸ்பெனில் இருந்து தனது ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் 3 நாட்களுக்கு பிறகும் நீடித்ததால், ஒருவேளை தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நினைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் இடது கை மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் வலியுடன் கூடிய கொப்புளங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.

    நிலைமை மோசமடைவதை அறிந்த குடும்பத்தினர், அவரை இத்தாலியின் கேடானியாவில் உள்ள சான் மார்கோ பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரே நேரத்தில் 3 நோய்களுக்கான முடிவு ‘பாசிட்டிவ்’ என வந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    Read More : மூக்கால் பலூன் ஊதுவதில் கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க நபர் - வைரலாகும் வீடியோ!


    அந்த நபருக்கு முதலில் எச்ஐவி மற்றும் குரங்கு அம்மை தொற்றும், கடைசியாக கொரோனாவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எச்ஐவி வைரஸின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி மருத்துவர்கள் அவரிடம் விசாரித்த போது, 2021ம் ஆண்டுஎச்ஐவி பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என வந்ததாகவும், சமீபத்திய ஸ்பெயின் பயணத்தின் போது ஆண்களுடன் பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதனையடுத்து சான் மார்கோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு சிகிச்சை பெற்ற நபர், கொரோனா மற்றும் குரங்கு அம்மையில் இருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். எச்ஐவிக்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் ஒரு மனிதரின் உடலில் கோவிட்-19, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. என மூன்று கொடுமையான நோய்கள் கண்டறியப்பட்டது நிபுணர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குரங்கு அம்மை மற்றும் கொரோனா தொற்று நோய்களின் அறிகுறிகள் எவ்வாறு ஒன்றுக்கு, ஒன்று ஒத்துப்போகிறது என்பதையும், பாலியல் நோய்களை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கான முக்கியத்துவத்தை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுவதாகவும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சாதாரண காய்ச்சல் வரும் போது இருமல், தும்மல், தலைவலி என பிரச்சனைகள் ஒன்றாக வந்தாலே மனிதனால் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியிருக்க ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர் பற்றிய செய்தி வெளியாகி, “இப்படியெல்லாம் கூட நோய்கள் ஏற்படுமா?” என கவலை அடையச் செய்துள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி