ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சாப்பிட்டால் ரத்தம் வழியும்! ஆர்டர் செய்த பீட்சாவில் சில்லுசில்லாய் கிடந்த கண்ணாடித்துண்டுகள்!

சாப்பிட்டால் ரத்தம் வழியும்! ஆர்டர் செய்த பீட்சாவில் சில்லுசில்லாய் கிடந்த கண்ணாடித்துண்டுகள்!

பீஸ்ஸாவில் கண்ணாடி துண்டுகள்

பீஸ்ஸாவில் கண்ணாடி துண்டுகள்

ஆர்டர் செய்த பீஸ்ஸாவில் கண்ணாடி துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்த நபர் அதனைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

    சோமோட்டோவில் பிரபல டோமினோஸ் பீட்ஸா உணவகத்திலிருந்து ஆர்டர் செய்த அருண் கொள்ளூரி என்ற நபருக்கு பீட்ஸாவில் கண்ணாடி துண்டுகளுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகாராகப் பதிவிட்டுள்ளார்.

    கண்ணாடியுடன் பீட்ஸாவை புகைப்படமாக எடுத்து பதிவிட்டதுடன் மும்பை காவல்துறையும் அதனுடன் டாக் செய்துள்ளார்.

    வைரலாக பரவிய அந்த பதிவுக்கு மும்பை காவல்துறை முதலில் டோமினோஸ் நிறுவத்தின் நுகர்வோர் சேவைக்குப் புகார் அளிக்கும் மாறு அறிவுறித்தியுள்ளனர். அந்த பதிவுக்கு நெடிசன்கள் தங்களது கசப்பான டோமினோஸ் அனுப்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து டோமினோஸ் நுகர்வோர் சேவை அந்த பதிவுக்குப் பதிலளித்துள்ளது. அதில் தாங்கள் நுகர்வோர் விருப்பத்திலும் உணவு பாதுகாப்பிலும் கவனம் கொள்வதாகவும் ஆர்டரின் முழு விவரம் தெரிவிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள உணவகத்தில் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    Also Read : காதல் கடிதம் தீட்டவே... மேகம் எல்லாம் காகிதம்.. உலக அஞ்சல் தினம் இன்று..!

    டோமினோஸ் உணவு நிறுவனத்தின் மேல் சமூக வலைத்தளத்தில் புகார் அளிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Janvi
    First published:

    Tags: Food, Viral News