Home /News /trend /

7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்....

7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்....

9 வருடம் கழித்து குடும்பத்துடன் இணைந்த சிறுமி

9 வருடம் கழித்து குடும்பத்துடன் இணைந்த சிறுமி

2013ம் ஆண்டு கடத்தப்பட்டு இதுவரை கண்டுபிடிக்க முடியாத சிறுமியின் காணாமல் போன வழக்கு "பெண் எண் 166" என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எண்ணை வைத்து அச்சிறுமி தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    மும்பையில் 2013ம் ஆண்டு காணாமல் போன 7 வயது சிறுமி தற்போது தானாகவே 16 வயதில் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். சிறுமி காணாமல் போனது குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை, எங்கு இருந்தாள் என்ன செய்துகொண்டிருந்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமி பல கஷ்டங்களுக்கும் கொடுமைகளும் பின்பு வீடு திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மும்பையில் ஜுஹு கல்லி என்னும் பகுதியில் 2013ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் 7 வயதான பூஜா கவுட் பள்ளிக்குச் செல்லும் போது பள்ளியின் வெளியில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். குழந்தை இல்லாத தம்பதியான ஹாரி டிசோசா மற்றும் சோனி டிசோசா நபர்கள் பூஜா கவுட் -வை பள்ளியின் வாசலில் வைத்து ஐஸ் கிரீம் வாங்கித்தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து சிறுமியைக் கோவாக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது நாட்கள் கழித்து அங்கிருந்து கர்நாடகாவிற்கு மாறியுள்ளனர். பின்பு ஹாரி டிசோசா மற்றும் சோனி டிசோசா தம்பதிக்கு என்று தனியாகக் குழந்தை பிறந்ததும் கடத்தி வந்த சிறுமியை ஓரம் கட்டியுள்ளனர். கர்நாடகாவில் இறக்கும் போது சிறிது காலமே சிறுமியைப் பள்ளியில் படிக்கவைத்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் பூஜாவின் படிப்பை நிறுத்தி வீட்டு வேலை செய்ய வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் பூஜாவுடன் சேர்த்து குடும்பமாக மும்பைக்குத் திரும்பியுள்ளனர். மும்பையில் பூஜாவை வீட்டு வேலை செய்ய வைத்ததுடன் இல்லாமல் வெளியில் வீட்டுவேலைக்கும் அனுப்பியுள்ளனர். மேலும் சிறுமியை அடித்தும்  கொடுமைப் படுத்தியுள்ளனர். தனது சிறுவயது வீட்டிற்கு அருகிலிருந்தும் பூஜாவிற்கு திரும்பிச் செல்ல சரியான வழி தெரியவில்லை.



    இந்த நிலையில் பூஜா ஒரு நாள் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு ஹாரி டிசோசா மற்றும் சோனி டிசோசா தம்பதியில் போனை எடுத்து அதில் தனது பேரைப் போட்டுத் தேடினாள். அப்போது காணாமல்போன புகார் குறித்து செய்தி வெளி வந்ததைப் பார்த்து அதில் உள்ள எண்களைக் குறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன் கூட வேலை செய்த பிரமிளா தேவேந்திரன் என்றவரின் உதவியுடன் அந்த எண்களைத் தொடர்புகொண்டதில் ஒரு எண் எடுக்கப்பட்டது. அது பூஜா அம்மாவின் பக்கத்து வீட்டுக்காரர் எண். உடனடியாக பூஜாவை அவள் அம்மாவுடன் வீடியோ காலில் பேச வைத்தார் அந்த நபர்.

    Also Read : இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் நாயின் ஓனரை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

    இதனைத் தொடர்ந்து DN நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பூஜாவை மீட்டுள்ளனர். காவலர்கள் ஹாரி டிசோசா மற்றும் சோனி டிசோசா தம்பதியைக் கைதுசெய்துள்ளனர். 9 வருடம் கழித்து வீடு திரும்பிய மகளைக் கண்டு அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Girl Child, Kidnapping Case

    அடுத்த செய்தி