Home /News /trend /

இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் முதல் படம் நீங்கள் ஏன் தனிமையாக உணர்கிறீர்கள் என்பதை சொல்லும்!

இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் முதல் படம் நீங்கள் ஏன் தனிமையாக உணர்கிறீர்கள் என்பதை சொல்லும்!

OPTICAL ILLUSION

OPTICAL ILLUSION

Optical Illusion | இந்த வகை ஆப்டிகல் இல்யூன்கள் உங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உண்மை தான். நீங்கள் முதலில் பார்க்கும் விஷயங்களை பொறுத்து நீங்கள் ஏன் தனிமையாக உணர்கிறீர்கள் என்பதை சொல்லும்!

மேலும் படிக்கவும் ...
    ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை நீங்கள் முதலில் பார்ப்பதை பொறுத்து உங்களை பற்றிய சில உண்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது. ஒளியியல் மாயையின் நோக்கம், ஒருவர் எவ்வளவு புத்திசாலியாகவும் கவனிக்கக் கூடியவராகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. சில சமயங்களில் நீங்கள் முக்கியமானவற்றைப் பார்ப்பீர்கள், ஆனால் அளவு சிறியதாக உள்ளவற்றையோ அல்லது படத்தில் எங்காவது மறைந்திருக்கும் விஷயங்களையோ பார்க்க தவறுவீர்கள். எனவே, ஆப்டிகல் மாயையின் அனைத்து அம்சங்களையும் புரிந்துகொள்ள ஒருவர் பொறுமையாக இருப்பது முக்கியம்.

    மேலும் இந்த வகை ஆப்டிகல் இல்யூன்கள் உங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உண்மை தான். நீங்கள் முதலில் பார்க்கும் விஷயங்களை பொறுத்தது இவை வெளிப்படும். அந்த வகையில், யுவர்டாங்கோ தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூன் படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ஒரு நபரின் கவனிப்பின் அடிப்படையில் காதல் மற்றும் உறவைப் பற்றிய மனநிலையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இதோ உங்களுக்கான ஆப்டிகல் இல்யூன் இதோ..

     

    Some might choose to stay alone, and some just feel lonely because they don’t have a choice.

    நிலவு :

    இந்த படத்தில் உங்களுக்கு முதலில் நிலவு தோன்றினால், நீங்கள் எப்பொழுதும் தனிமையாக உணர்கிறீர்கள் என்று அர்த்தம். அதே போன்று நீங்கள் யாருடனும் மிகவும் சுதந்திரமாக இருப்பது வசதியாக இல்லை என்பதே இது உணர்த்துகிறது. மேலும் மற்றவர்களை நம்புவது உங்களுக்கு ஒரு பயங்கரமான மற்றும் பயமுறுத்தும் உணர்வை தரும். ஆனால் உங்கள் பயத்தை நீங்கள் வெளிகாட்ட தயாராக இல்லை. நீங்கள் விரும்பும் உறவுகளை உங்களால் உருவாக்க முடியாது. இருப்பினும் உங்களை பற்றி மற்றவர்களிடம் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் நேசிக்கும் சில அழகான நட்புகளை உருவாக்குங்கள்.

    திமிங்கிலம் :

    முதலில் நீங்கள் இந்த படத்தில் திமிங்கிலத்தைப் பார்த்தால், பரிபூரணவாதிகளாக இருப்பீர்கள். நீங்கள் விரும்பும் நபரின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவீர்கள். உறவில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதை கண்டு ஓடி விடுவீர்கள். எனவே, நீங்கள் உறவுகளிலிருந்து விலகி இருக்க, நீங்கள் விரும்பாவிட்டாலும் தனிமையாக இருக்க விரும்புகிறீர்கள். இதுதான் உங்களின் தனிமை ஆளுமையாக இருக்கும்.

    சர்பிங் செய்யும் நபர் :

    நீங்கள் முதலில் சர்பிங் செய்யும் நபரை பார்த்தால், நீங்கள் தனிமையில் இருக்க விரும்பும் நபர் என்று அர்த்தம். அருகில் உள்ள உறவுகள் உங்களை பயமுறுத்துவதாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள், மேலும் அவற்றில் உங்களை இழக்க நேரிடும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். இந்த அச்சங்கள் தான் உங்களை யாரோ ஒருவருடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று தூண்டுகிறது. மேலும் ஒருவித தனிமை உணர்வையும் உங்களுக்கு ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதில் தோல்வியடைந்து தனிமையாக இருக்க தயாராகுகிறீர்கள்.

     
    Published by:Elakiya J
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி