ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

போலீசாருக்கு முதல் எதிரி, சமோசாவும் சிக்கன் கறியும் – சவாலை எதிர்கொண்ட அந்தமான் காவல்துறை

போலீசாருக்கு முதல் எதிரி, சமோசாவும் சிக்கன் கறியும் – சவாலை எதிர்கொண்ட அந்தமான் காவல்துறை

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

Andaman Police | பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு பல விதங்களில் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதில், போலீசாரின் உடல் நலத்துக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது, சமோசாவும் சிக்கனும் என்று சொன்னால் நம்ப முடியுமா?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்தியக் காவல்துறையினர் என்றாலே ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுவார்கள். போலீஸ்காரர்கள் என்றால் கடுமையானவர்கள், தொந்தியும் தொப்பையுமாக இருப்பார்கள், தவறாக நடப்பார்கள் என்று திரைப்படங்களில் பல விதமாக  சித்தரிக்கப்பட்டதை தான் பெரும்பாலானோர் உண்மை என்று நம்புகிறோம். ஆனால், உண்மை எங்கோ தொலைவில் யாரும் அறியாதவாறு இருக்கிறது. பல துறைகளில் பணியாற்றுபவர்கள் தற்போது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது போலவே, போலீசாரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

அதிகப்படியான வேலை பளுவால் சரியான தூக்கமில்லாமல், குழந்தையையும் சரியாக பார்த்துக் கொள்ள முடியாமல், நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சித்ரா என்ற காவல்துறை பணியாளர், அதிகாலையில் 4.30 மணிக்கு எழுந்து, முடிந்த வரை சில உடற்பயிற்சிகளை செய்து, டியூட்டிக்கு ரிப்போர்ட் செய்ய பறந்து செல்கிறார். ஆனால், சில நாட்களாக அவருடைய வயிறு உப்பசமாக இருப்பதாக உணர்ந்தார். போலீசுக்கு தொப்பை இருப்பது ஒன்றும் புதிதில்லை, திரைப்படங்கள் அப்படி தான் பெரும்பாலும் கான்பித்திருக்கின்றன.

மேலும், நம் நாட்டில் எந்த துறையில் வேலை செய்தாலும், உடல் நல பாதிப்பு அல்லது நோய் அறிகுறிகள் வந்தால் மட்டுமே உடல் எடை மீது, ஆரோக்கியம் மீது அக்கறை காட்டுவோம். இதில் காவல் துறையினரும் விதிவிலக்கல்ல. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இல்லாமல், உடல் பருமனும் இணை நோய்களும் ஃபிட்டாக இருக்க வேண்டிய போலீஸ்காரர்களையே பாதிக்கிறது!

காவலாளி சித்ரா பணியாற்றுவது அழகிய தீவுகளைக் கண்ட அந்தமான் மற்றும் நிகோபார். காணும் இடம் எங்கும் இயற்கை எழில் கொஞ்சும், நம்மை மறக்கச் செய்யும் ரம்மியமான சுற்றுப்புறம் நிறைந்த தீவுகளிலும், ஆரோக்கியமான உணவுகளுக்கு பஞ்சம் தான்!

Also Read : சாதிக்க வயது ஒரு தடை இல்லை! 64 வயதில் அசத்தலாக கால்பந்தை சுழற்றும் தாத்தா.. வைரல் வீடியோ..

சமோசாக்கள், வெண்ணெய் போல கரையும் சிக்கன், பொறித்த பன்னீர் ஆகிய உணவுகள் தான் தங்களுக்கு எதிரி என்று காவலாளி தெரிவித்துள்ளார். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற உந்துதல் நாடு முழுவதும் பரவியுள்ளது. வடக்கு பஞ்சாபில், அதிக உடல் எடைகொண்ட போலீசாரால், திருடர்களை, போதை மருந்து விற்பவர்களை பிடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் நீதிமன்றம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

எனவே, உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள பல வழிகள் இருக்கும் அந்தாமான் தீவுகளிலேயே அது பிரச்சனையாக இருப்பதால், அங்கிருந்தே, உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இவாஞ்சலிஸ்ட் மற்றும் பிரபல காவல் அதிகாரியான சத்யேந்திர கார்க், காவல் துறையினர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முயற்சியை முன்னெடுத்து வைத்துள்ளார்.

லஞ்சம், குடி, என்று ஒரு குற்றம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்மையாக பணியாற்றும் காவல்துறையை அந்தமான் தீவுகளில் உருவாக்கிய பெருமைக்கு உரியவர் கர்க்! பின்னர், உடல் எடை, ஃபிட்னஸ் இரண்டிலும் டிசிப்ளின் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தார். நாலாயிரத்துக்கும் மேற்பட்ட காவலாலர்களில் 50% மேற்பட்டவர்கள் உடல் பருமன் அல்லது அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலருக்கு உடல் பருமன் என்பது கல்லீரல் நோயால் ஏற்பட்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வெவ்வேறு திட்டங்களை முன்வைத்தும், கோவிட் தோற்றால் எல்லாமே கைவிடப்பட்டது. இருப்பினும், இருப்பதிலேயே அதிக எடை கொண்ட இரண்டு காவலர்களை தேர்வு செய்து, நேர்த்தியாக ஒரு எடை குறைப்பு மற்றும் ஃபிட்னஸ் திட்டம் உருவாக்கப்பட்டது.

Also Read : 10-ம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் செய்த சாதனை ஐஏஎஸ் அதிகாரி... இளைஞர்களின் ரோல்மாடல் என குவியும் பாராட்டுகள்

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு எது முக்கியம் என்பதில் அக்கறை காட்டினால், அதிகாரிகள் அதைப் பின்பற்றுவார்கள். போர்ட் பிளேரில் பணியாற்றிய, 34 வயதான ஒரு அதிகாரிக்கு ஃபிட்னஸ் திட்டம் தொடங்கப்பட்டது. அவருடைய எடை 104 கிலோவாக இருந்தது. உணவுக் கட்டுப்பாடு, எளிய உடற்பயிற்சிகள் என்று 20 கிலோவுக்கு அருகில் குறைத்தார். உடல் எடை குறைந்ததோடு, ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வந்தது, வயிற்றின் சுற்றளவு 4 இன்ச்கள் குறைந்தன. குட்டியானை என்று மற்றவர்களால் கிண்டல் செய்யப்பட்ட அந்த காவலர், காண்பவரை எல்லாம் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் மனைவி மிகவும் சந்தோஷமாக, என் பழைய ஜானி கிடைத்துவிட்டார் என்று குதூகலித்தார்.

அதிகாரிகளின் உடல் மற்றும் மன நலம் பற்றிய விவாதங்களில் மன அழுத்தம் எப்போதும் இடம்பெறுகிறது. 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரு திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் வரிசையாக நிற்க  வைக்கப்பட்டு இடுப்பு அளவுகள் அளக்கப்பட்டன. மருத்துவர்கள் குழு அவர்களின் மெட்டபாலிசம் ரீடிங்கை எழுதி, அவர்களின் ஸ்ட்ரெஸ் லெவல் குறித்த கேள்வித்தாள்களை கொடுத்தனர்.

இந்திய போலீஸ் படைக்கு தேவையான அதிகாரிகளில் நான்கில் மூன்று பங்கு அதிகாரிகள் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு பங்கு அதிகாரிகளின் வேலையும் சேர்த்து இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என்பதால், ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் பணிச்சுமையால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள், என்பதையும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பல ஆய்வுகள் மற்றும் பயிற்சிகளின் தரவுகளை சேகரித்த கர்க், அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அமல்படுத்த, அனைத்து காவலர்களுக்கும் உதவும் வகையில் புதிய கொள்கைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் பணி ஓய்வு பெற இருக்கிறார் கர்க்! இவரின் முயற்சிகளை சிலர் பாராட்டினாலும், நன்றி தெரிவித்தாலும், சிலருக்கு இவர் ரிட்டையர் ஆவது சந்தோஷமாகவே இருக்கிறது.

சித்ரா என்ற காவலர், மூத்த காவல் அதிகாரியின் இந்த முயற்சி, ‘எங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் மீதும் ஒருவர் அக்கறை காட்டியிருப்பது இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral