Home /News /trend /

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ரொம்ப பிடிச்ச உணவு இது தான்! சீக்ரெட்டை உடைத்த செஃப்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ரொம்ப பிடிச்ச உணவு இது தான்! சீக்ரெட்டை உடைத்த செஃப்

எலிசபெத் ராணி

எலிசபெத் ராணி

Queen Elizabeth | 96 வயதான குயின் எலிசபெத் பல ஆண்டுகளாக ஒரே காலை உணவை விரும்பிச் சாப்பிட்டு வருவதாக யூ-டியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiaenglandenglandengland
    இந்தியாவில் ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆட்சி செலுத்தி இருந்தாலும், ‘ராஜ வாழ்க்கை வாழுறாங்க’ என்ற வார்த்தையை கேட்டதுமே பெரும்பாலானோருக்கு நினைவிக்கு வருவது ‘குயின் எலிசபெத்’ ஆக தான் இருக்கும். அந்த அளவுக்கு 2022ம் ஆண்டு வரையிலும் இங்கிலாந்தின் அதிகாரமுள்ள அரச குடும்பமாக குயின் எலிசபெத் குடும்பம் விளங்கி வருகிறது.

    எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத் 1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக பொறுப்பு வகித்து வருகிறார். ராணி எலிசபெத் பெயரைக் கேட்டாலே சினிமாவில் காட்டப்படுவது போல் ராயல் அரண்மனை, ஆடம்பரமான உடைகள், நீண்ட மேஜை முழுவதும் விதவிதமான உணவு வகைகள், ஆடம்பர கார்கள், ஆயிரக்கணக்கான காவலர்கள் போன்ற காட்சிகள் விரியும். குறிப்பாக உணவு விஷயத்தைப் பொறுத்தவரை யாருமே வாங்க முடியாத விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவை தான் அரச குடும்பத்தினர் சாப்பிடுவார்கள் என்ற கருத்தும் உள்ளது.

    ஆனால் இங்கிலாந்தின் மகாராணியான குயின் எலிசபெத் தனது 5 வயதில் எந்த சாண்ட்விச்சை விரும்பிச் சாப்பிட்டாரோ, அதையே தான் அதையே தான் இன்று வரை சாப்பிடுகிறாராம். ராணியின் இந்த பழக்கம் குறித்து அரண்மனையைச் சேர்ந்த ராயல் செஃப்பாக இருந்த மெக் க்ராடி தெரிவித்துள்ளார். அவர் 15 ஆண்டுகளாக பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தை தவிர வேறு யாருக்கும் சமைத்தது கிடையாதாம். 96 வயதான குயின் எலிசபெத் பல ஆண்டுகளாக ஒரே காலை உணவை விரும்பிச் சாப்பிட்டு வருவதாக யூ-டியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    Read More : எலான் மஸ்கின் கல்லூரி கால புகைப்படங்களை ஏலத்தில் விட்ட முன்னாள் காதலி... காரணம் என்ன?


    அவர் தனது வீடியோவில், "ஜாம் பென்னி" எனப்படும் ரொட்டி மீது லேசாக ஜாம் தடவப்பட்ட சாண்ட்விச் தான் ராணியின் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இந்த சாண்ட்விச் அரண்மனை தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஸ்காட்டிஷ் ஸ்ட்ராபெர்ரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாம், சிறிதளவு வெண்ணெய் ஆகியவற்றை ரொட்டி துண்டுகளில் தடவி தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாலைப்பொழுதியில் தேநீர் பருவதையும் ராணி இதுவரைக் கடைபிடித்து வருகிறாராம்.

    தக்காளி, பாலாடைக்கட்டி, புதினா, கிரீம் சீஸ், வெள்ளரி போன்ற பல்வேறு உணவுப் பொருட்கள் கலந்த சாண்ட்விச்சும் ராணிக்கும் மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் ராணியின் பேவரைட் காலை உணவு என்றால் அது ஜாம், வெண்ணெய் தடவப்பட்ட பிரட் தானாம். செஃப் மெக் க்ராடி இளவரசி டயானா மற்றும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோருக்கும் சமைத்துள்ளார். இங்கிலாந்தின் மகாராணியாக விளக்கும் எலிசபெத் ஆடம்பரம் இல்லாத மிகவும் எளிமையான காலை உணவுகளை உட்கொள்வதாக வெளியாகியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் குயின் எலிசபெத்தின் எளிமையை பாராட்டி வருகின்றனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி