ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

’ஓசி’ என்ற சொல்லுக்கு ’இலவசம்’ என்று அர்த்தம் வர இதுதான் காரணம் - சுவாரஸ்ய பின்னணி!

’ஓசி’ என்ற சொல்லுக்கு ’இலவசம்’ என்று அர்த்தம் வர இதுதான் காரணம் - சுவாரஸ்ய பின்னணி!

காட்சி படம்

காட்சி படம்

ஓசி என்ற சொல்லுக்கு இலவசம் என்ற அர்த்தம் வரத் தகவல் பரிமாற்றமே காரணம் என்று சொன்னால் நம்ப முடியுமா? விவரங்கள் இதோ.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அன்றாட வாழ்க்கையில் பேசும்போது பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். உரையாடல்களின் போது, பொருட்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது, எழுதும்போது தற்போதைய காலகட்டத்தில் பல வார்த்தைகளை இணைத்து வாக்கியம் அமைத்துப் பேசுகிறோம்.

ஆதிகாலத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் கால சூழ்நிலை காரணமாக மாற்றம் பெற்றுள்ளது. குறிப்பாகப் பேச்சு மொழியில் ஆங்கிலம் கலந்த வார்த்தைகள் சராசரியாக இடம்பெறுகின்றது.

போர்ச்சுகல், ஸ்பெயின், ட்ச், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர்கள் என்ற பல நாடுகளின் வரவு பேச்சு மொழியில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

அப்படி காலப்போக்கில் மாற்றம் பெற்ற வார்த்தை/ சொற்கள்/பெயர்களின் தோற்றம் மற்றும் விளக்கம் பற்றிப் படிப்பதற்குச் சொல்லிலக்கணம் ( Etymology) என்று பெயர். அப்படி தமிழில் நாம் பேசும்போது அன்றாட பயன்படுத்தும் ‘ஓசி’ என்ற சொல்லின் வரலாற்றைக் கேட்டால் கண்டிப்பாக வியப்பாக இருக்கும்.

சாதாரணமாக ‘ஓசி’என்பதற்கு இலவசம் என்று அர்த்தம். ஓசி-இல் கிடைத்தது என்றால் இலவசமாகக் கிடைத்தது என்று நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் இந்த வார்த்தை அப்படி ஒரு அர்த்தம் தருவது இல்லை.

தகவல் தொடர்பில் முதல் கட்டம் தபால் முறையே. தபால் அனுப்பும் முறை தகவல் பரிமாற்றத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது. தபால் முறையை இந்தியாவில் அறிமுக செய்தவர்கள் ஆங்கிலேயர்களே.

கிழக்கு இந்தியா கம்பெனி ஊழியர்கள் இடையே தகவல் பரிமாற்றத்திற்குத் தபால் முறையே முதன்மையாக இருந்தது. தபால் முறையை எளிமையாக்க அஞ்சல் தலை உருவாக்கப்பட்டு அதன் மூலம் தான் தபால் முறை இந்தியாவில் செயல்பாட்டில் இருந்தது. அப்போது அஞ்சல் தலைகளில் மேல் சில வார்த்தைகள் அச்சிடப்படும்.

உதாரணத்திற்குத் தபால் தலை மேல் On H.M.S என்று குறிப்பிட்டு இருந்தால் On Her Majesty's Service என்று அர்த்தம். அந்த குறிப்பிட்ட தபால் அரண்மனைக்கு அனுப்பப்படும். அதே போல், தபால் மேல் On Company's Service என்பது சுருக்கமாக OC என்று குறிக்கப்பட்டது. கிழக்கு இந்தியா கம்பெனி ஊழியர்கள் கம்பெனி தகவல்களை OC என்று அச்சிடப்பட்ட தபால் மூலம் அனுப்புவர். அப்படி அனுப்பப்படும் தபால்களுக்குக் காசு கிடையாது. கம்பெனி பணிக்கான செல்வதால் இலவசமாக அனுப்பப்படும்.

இந்த சேவையை கம்பெனி ஊழியர்கள் சில சமயங்களில் தங்களின் சொந்த பணிகளுக்குப் பயன்படுத்துக் கொள்வர். அவர்கள் ‘ஓசி’இல் தபாலை அனுப்பியுள்ளேன் என்று கூறுவர். அதற்குப் பணம் இல்லாமல் தபால் சேவையைப் பயன்படுத்தினர் என்று அர்த்தம்.

அதுவே காலப்போக்கில்,’ஓசி’ என்பதற்கு இலவசம் என்று அர்த்தம் ஆகிவிட்டது. இப்படிப் பிறந்த வார்த்தையே நாம் தற்போது வரை இலவசமாகப் பெறும் போது ‘ஓசி’இல் வாங்கியதா? என்று குறிப்பிட்டுக் கேட்கிறோம்.

இது போல், ரவுடிகளை குறிப்பிடும் கேடி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும் மணி போன்ற வார்த்தைகளும் இப்படி பரிமாணம் அடைந்து வந்த வார்த்தைகளே என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Trending