ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டெஸ்லா தரவுகளை வெளியிட்ட ஊழியர் சிக்கியது எப்படி? எலான் மஸ்கின் சுவாரஸ்யமான ட்வீட் வைரல்!

டெஸ்லா தரவுகளை வெளியிட்ட ஊழியர் சிக்கியது எப்படி? எலான் மஸ்கின் சுவாரஸ்யமான ட்வீட் வைரல்!

Elon Musk

Elon Musk

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.தனது ட்விட்டர் பக்கத்தை பின்தொடருபவர்கள் கேட்கும் சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலக அளவில் பிரபலமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ரகசிய தகவல்கள் கசிந்த விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சிக்கியது எப்படி என்று விளக்கியுள்ளார்.

  2008ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் தகவல்களை அங்கு வேலை செய்து வந்த ஊழியர் ஒருவர் செய்தி நிறுவனத்திற்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?, அந்த ஊழியர் எப்படி சிக்கினர் என்பது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். பிசினஸ் மற்றும் தனிப்பட்ட அப்டேட்களுக்கு மட்டுமின்றி, தனது ட்விட்டர் பக்கத்தை பின்தொடருபவர்கள் கேட்கும் சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

  அந்த வகையில் @NasaEarthMars என்ற ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து வைபவ் பல்கேரே என்பவர் டெஸ்லாவின் ரகசியங்கள் கசியக் காரணமாக இருந்த ஊழியரைக் கண்டுபிடித்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  ReadMore : நம்ப முடியாத விலைக்கு ஏலம் போன 140 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேண்ட்கள்!

  எலான் மஸ்க் தனது ட்வீட்டில் "இது மிகவும் சுவாரஸ்யமான கதை. நாங்கள் அனைவருக்கும் ஒரே மின்னஞ்சல்களை அனுப்பினோம், ஆனால் ஒவ்வொரு மின்னஞ்சலும் வாக்கியங்களுக்கு இடையில் ஒன்று அல்லது இரண்டு இடைவெளிகளைக் கொண்ட குறியீட்டைக் கொண்டிருந்தது, அது தரவு கசிந்தவரை அடையாளம் காணும் பைனரி கையொப்பத்தை உருவாக்க உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  அதாவது இது கேனரி ட்ராப் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு முக்கியமான ஆவணத்தின் வெவ்வேறு பதிப்புகளைக் கொடுத்து, எந்தப் பதிப்பு கசிந்துள்ளது என்பதைப் பார்ப்பதன் மூலம் தகவல் கசிவை அம்பலப்படுத்துவதற்கான ஒரு முறையாகும்.

  தரவுகளை கசிய விட்டது யார்?

  மற்றொருவர் எலான் மஸ்கிடம் தரவு கசிவு வழக்கில் குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தங்களது நிறுவனத்தை விட்டு வேறு எங்காவது போய் வேலைக்குச் சேர்ந்து கொள்ளும் படி அனுப்பி வைத்ததாகவும், அந்த நேரத்தில் நிறுவனம் பாதகமான நிலையில் இருந்ததால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

  ஆம், 2008ம் ஆண்டு நஷ்டம் மற்றும் கடன் காரணமாக டெஸ்லா நிறுவனம் மூடப்படும் நிலைக்குச் சென்றது. அப்போது நிறுவனத்தைக் காக்க துணிச்சலாக முடிவெடுத்த எலான் மஸ்க் தனது மொத்த பணத்தையும் முதலீடு செய்து டெஸ்லாவின் சிஇஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள எலான் மஸ்க், தற்போது வாசனை திரவியம் தயாரிக்கும் பிசினஸில் புதிதாக கால் பதித்துள்ளார். பர்ன்ட் ஹேர் என்ற வாசனை திரவியம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தயவுசெய்து என்னுடைய வாசனை திரவியத்தினை வாங்குங்கள். அப்போது தான் என்னால் ட்விட்டரை வாங்க முடியும்” என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளது ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Twitter, Viral Video