Home /News /trend /

ஊழியருக்கு ‘பாஸ்’ அனுப்பிய மின்னஞ்சல் இணையத்தில் வைரல்.. அப்படி என்னதான் அனுப்பி இருந்தார்..?

ஊழியருக்கு ‘பாஸ்’ அனுப்பிய மின்னஞ்சல் இணையத்தில் வைரல்.. அப்படி என்னதான் அனுப்பி இருந்தார்..?

Boss email

Boss email

Viral Video | ஒரு ஊழியருக்கு தன்னுடைய பாஸிடம் இருந்து, அவரை அழைத்து பேசுமாறு செய்தி வந்த போது, பதறிப் போனார்.

அலுவலகத்தில், ‘பாஸ்’  உங்களை உடனடியாக வரச்சொல்கிறார் என்று அழைப்பு வந்த உடனேயே லேசான படபடப்பு தோன்றும். எதற்கு உடனடியாகக் கூப்பிடுகிறார், என்ன சொல்லப் போகிறார் என்று மூளையில் குட்டி ரோலர் கோஸ்டர் ஓடும், இதயம் வெளியே வந்து விழும் அளவு அதிவேகமாகத் துடிப்பது போல தோன்றும். பெரும்பாலான நேரங்களில், பலரும் இதே போலத் தான் உணர்கிறார்கள்.

கார்ப்பரேட் உலகில் முதலாளிகள் நியாயம் இல்லாமல் நடக்கிறார்கள் என்று பெரும்பாலான மக்கள் புகார் கூறுகிறார்கள். என்ன தவறு செய்தேன், கண்டிக்கப் போகிறார்களா, அல்லது பணிநீக்கம் செய்யப்படுகிறேனா என்ற எண்ணங்கள் தோன்றும். எனவே, உங்கள் பாஸ் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னாலோ அல்லது அழைத்தாலோ, உடனேயே மோசமாக ஏதோ நடக்கப் போகிறது என்று நினைப்பது மிகவும் இயல்பானது.

இதே போல சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் நெட்டிசன்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு ஊழியருக்கு தன்னுடைய பாஸிடம் இருந்து, அவரை அழைத்து பேசுமாறு செய்தி வந்த போது, பதறிப் போனார். ஆனால், அவருடைய பாஸ், ஊழியரின் வேலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதியளித்து ஊழியரை சமாதானப்படுத்தினார். அந்த ஊழியரின் பெயர் ஜெஸ்.

Also Read : கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு

ஜெஸ் தனது முதலாளியைப் புகழ்ந்து டிக்டாக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 'உங்களைப் போன்றவர்களுடன் பணிபுரிய 100 சதவீதம் பரிந்துரைப்பேன்' என்று மனம் திறந்து பாராட்டி பேசியுள்ளார் .

ஜெஸ் பகிர்ந்த வீடியோ, விளம்பர பாணியில் ‘டென்ஷனா, எனக்கா, கிடையவே கிடையாது’ என்று தொடங்குகிறது. அதன் பிறகு, 8 மணிக்கு தன்னுடைய பாஸ் அனுப்பிய மெசேஜின் ஸ்க்ரீன்ஷாட்டைக் காட்டுகிறார். அதில், நேரமிருக்கும் போது அழைக்கச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எதற்கு அழைக்கச் சொல்கிறார் என்ற காரணம் இல்லாமல் மின்னஞ்சல் வருவது பீதியைக் கிளப்பும். ஆனால், தனது ஊழியரை அச்சுறுத்த வேண்டாம் என்ற முனைப்பில், ‘எந்தப் பிரச்சனையும் இல்லை, விடுப்புக்குப் பிறகு இப்போது தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் விடுமுறை பற்றித் தெரிந்து கொள்ளவே அழைக்கச் சொன்னேன்’ என்று விளக்கமும் அளித்திருந்தார்.

Also Read : இனி மாஸ்க் அணிய வேண்டாம் - கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் இங்கிலாந்து அரசு

இந்த வீடியோவை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர், 6 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளது, ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டும், கமெண்ட்டுகள் பதிவு செய்யப்பட்டும் காணப்படுகிறது. “உலகின் சிறந்த பாஸ் விருது’ ஜெஸ்ஸின் பாஸுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று பாராட்டி தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.

இதைக் கடந்து பெரிய ஆச்சரியமாக, கேப்ரியல்லா கராசாஸ் கெல்லி என்ற டிக்டாக் யூசர் அளித்த கமெண்ட் மேலும் விரலானது. அவர் தான் ஜெஸ்ஸின் பாஸ். கெல்லி, “நான் தான் அந்த பாஸ். ஊழியர்களை அழைத்து பேசுவதும் பேசச் சொல்வதும் எனக்கு வழக்கம். எப்போதுமே, ‘என்னை அலுவலகத்திற்கு வந்து பார்க்க முடியுமா?, எந்தப் பிரச்சனையும் இல்லை’ என்றே கூறுவேன் என்று கமென்ட் செய்திருந்தார்.
Published by:Selvi M
First published:

Tags: TikTok, Trending, Viral Video

அடுத்த செய்தி