• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • HBD Cheems- மீம் கிரியேட்டர்ஸ்களின் செல்லத்துக்கு 16-வது பிறந்தநாள்

HBD Cheems- மீம் கிரியேட்டர்ஸ்களின் செல்லத்துக்கு 16-வது பிறந்தநாள்

சீம்ஸ் நாய்

சீம்ஸ் நாய்

மீம் கிரியேட்டர்ஸ்களால் சீம்ஸ் என்று அழைக்கப்படும் நாய்க்கு 16-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

  • Share this:
    நெட்டிசன்களின் பொழுதுபோக்குக்காக எப்போதும் சமூக ஊடங்கங்களில் புது புது வீடியோக்கள், புகைப்படங்கள், மீம்கள், சினிமாக்கள் போன்றவை வைரலாகி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக மீம்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு சின்ன விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றாலும் மீம்கள் பெரிதும் உதவுகின்றன. அரசியல் தொடங்கி சினிமா வரை மீம்கள் தான் இன்றைய சமூக ஊடகங்களை ஆட்சி செய்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மீம்களை நெட்டிசன்கள் உருவாக்கி வருகின்றனர்.

    அந்த வகையில் மீம்களில் மிக பிரபலமான கதாபாத்திரமாக சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் மிக முக்கியமானது "டாகி மீம்" என்று அழைக்கப்படும் நாய் புகைப்படம் கொண்ட மீம்கள் தான். ஆரம்பத்தில் சாதாரணமாக மீம்களில் பயன்படுத்திய இந்த நாய் புகைப்படம் சமீப காலமாக சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டும், முக்கிய மீம் கன்டென்ட்டாக மாறியுள்ளது.

    இந்த நாய் புகைப்படம் கொண்ட மீம்களில் உலா வரும் நாயின் உண்மையான பெயர் கபோசு (Kabosu). ஜப்பானை சேர்ந்த ஒருவர் 2008 ஆம் ஆண்டு இந்த நாயை மீட்டு தத்தெடுத்து கொண்டார். 2010 ஆம் ஆண்டு இதன் உரிமையாளர் கபோசுவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது இதனுடைய மிக அழகான போஸ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. அந்த சமயத்தில் இந்த நாயின் வயது வெறும் 5 தான். இந்த நிகழ்விற்கு பிறகே கபோசுவின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர்.

    இப்போது தனது 16 ஆவது பிறந்தநாளை இந்த கபோசு நாய் கொண்டாடி வருகிறது. இதன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை இதன் உரிமையாளர் மிக அழகாக ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த புகைப்படங்களை, கபோசு நாய்க்கென உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்களுடன் சேர்த்து சிறந்த கேப்ஷன் ஒன்றையும் கபோசுவின் உரிமையாளர் பதிவு செய்துள்ளார். அதில், "கபோசுவை வைத்து நான் எடுத்த போட்டோஷூட் இந்த அளவிற்கு இணையத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் ஒரு நாளும் கற்பனை செய்து பார்த்ததில்லை" என்று எழுதியுள்ளார். இந்த பதிவை 80,000 பேர் லைக் செய்துள்ளனர். பலர் இந்த பிரபலமான செல்லப் பிராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by かぼすママ (@kabosumama)





    மேலும் 2010 ஆம் ஆண்டு வைரலான அந்த புகைப்படத்தை இந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விட்ட ஏலத்தில் ஒருவர் வாங்கியுள்ளார். இதன் ஏல மதிப்பு 4 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். இதில் கிடைத்த பணத்தை பயன்படுத்தி, தொண்டு நிறுவனங்களுக்கு உதவ போவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் மாதம் இந்த டாகி மீம் பல பகுதியாக பிரிந்த பின்னர் இதன் நெப்ட் மதிப்பு 4 மில்லியனில் இருந்து 220 மில்லியனாக ஒரே இரவில் உயர்ந்தது. இதன் ஒரு பகுதி மதிப்பை வைத்திருப்பது என்பது மோனாலிசா ஓவியத்தின் முழு பகுதியையும் வைத்திருப்பதற்கு சமம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: