Home /News /trend /

கன்றுக்குட்டிக்கு பிரமாண்டமாக பெயர் சூட்டும் விழா நடத்திய தம்பதிகள்!

கன்றுக்குட்டிக்கு பிரமாண்டமாக பெயர் சூட்டும் விழா நடத்திய தம்பதிகள்!

கன்றுக்குட்டிக்கு பிரமாண்டமாக பெயர் சூட்டும் விழா

கன்றுக்குட்டிக்கு பிரமாண்டமாக பெயர் சூட்டும் விழா

Trending | தெலுங்கானா தம்பதிகள், தங்களது பசு கோமாதா மற்றும் புதிதாய் பிறந்த கன்றுக்குட்டி 'ஷிவடு' ஆகிய இரண்டையும் புதிய ஆடைகள் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களால் அலங்கரித்தனர்

    தெலுங்கானா மாநிலம் யெல்லாரெட்டிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர், ‘கோமாதா’ எனப் போற்றும் தங்கள் பசுவின் கன்றுக்கு பிரம்மாண்டமாக பெயர் சூட்டும் விழாவை நடத்தி அதன் மீதான தங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். ராஜண்ணா- சிர்சில்லா மாவட்டத்தில் தடபுடலாக நடந்த இந்த கன்றுக்குட்டிக்கான பெயர் சூட்டும் விழா கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது; குறிப்பாக 'அனிமல் லவ்வர்ஸ்' மற்றும் இந்து மத சங்க நிர்வாகிகளின் மத்தியில்!

    மிரியல்கர் ராமன் கிஷனும் அவரது மனைவியும் சில பழமைவாத நம்பிக்கைகளை காலத்தின் போக்கில் புறக்கணிக்காமல், தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். மேலும் தங்கள் மதத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை வலுவாக ஆதரிக்கும் வழக்கத்தினையும் கொண்டுள்ளனர். அதிலொரு பகுதியாக இவர்கள் நீண்ட காலமாக பசுவைப் பராமரித்து, அதற்கு வழக்கமான பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். இந்த தெலுங்கானா தம்பதியினர், குறிப்பிட்ட (கோமாதா) பசு கர்ப்பமாக இருந்தபோது, ​​அதற்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தினர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    இவர்களின் கோமாதா பசு, காளை கன்று ஒன்றை ஈன்றதை அடுத்து, அதற்கு பெயர் சூட்டும் முனைப்பின் கீழ் கடந்த 21 ஆம் தேதி அன்று மார்க்கண்டேயர் கோவிலில் 'பெயர் சூட்டும் விழா' ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட நாளில் வேத வித்வான் உமா சங்கர சர்மாவின் வேதமந்திரங்களுக்கு மத்தியில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டிக்கு 'ஷிவடு' என்று பெயர் சூட்டப்பட்டது, அதாவது சிவனின் பெயரை சூட்டி உள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்காக இந்த தெலுங்கானா தம்பதிகள், தங்களது பசு கோமாதா மற்றும் புதிதாய் பிறந்த கன்றுக்குட்டி 'ஷிவடு' ஆகிய இரண்டையும் புதிய ஆடைகள் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களால் அலங்கரித்தனர். இந்த தம்பதியினர் விடுத்த அழைப்பின் பெயரில், யெல்லாரெட்டிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டனர். பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட திரளான மக்களிடம் இந்த தம்பதிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு நில்லாமல் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான உணவையும் வழங்கி மகிழ்ந்தனர்.

    பசுவுக்கு பூஜைகள் செய்து, அதை ஒருய தெய்வீக உயிரினமாக கருதும் மகக்ளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், செல்வம் மற்றும் செழிப்பு உண்டாகும் என்பது இந்த தெலுங்கானா தம்பதிகளின் நம்பிக்கை ஆகும். இவ்விழா குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவது ஒருபக்கம் இருக்க, பசுவையும், அதன் கன்றையும் போற்றுவதற்காக இந்த தெலுங்கானா தம்பதியினருக்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தத்தம் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

     
    Published by:Elakiya J
    First published:

    Tags: Telangana, Trending

    அடுத்த செய்தி