நீங்கள் வளர்ந்த பின்னர் யாராக ஆக விரும்புகிறீர்கள்? என்று குழந்தைகளிடம் கேட்டால் வழக்கமான மருத்துவர், இன்ஜினியர், விமானி , விண்வெளி வீரர், ஐ ஏ எஸ் ஆபிசர் என்று தான் பெரும்பாலான பதில்கள் இருக்கும்.
ஏதாவது ஓரிரு குழந்தைகள் நடிகர்/விளையாட்டு வீரர் என்று பதில் சொல்வார்கள். ஆனால் சத்தீஸ்கரின் துளசி கிராமத்தில் உள்ள குழந்தைகளை கேட்டால், யூடியூபர் என்ற பதிலே கிடைக்கும்
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள துளசி கிராமத்தில் வசிக்கும் 3,000 பேரில், சுமார் 1,000 பேர் வெற்றிகரமான யூடியூபர்களாக இருக்கின்றனர் . 85 வயது பாட்டி முதல் 15 வயது பையன் வரை எல்லோருமே தனித்தனி சேனல்களை வைத்திருக்கின்றனர்.
பசிபிக் கடலில் மிதக்கும் 90% குப்பைகளுக்கு இந்த 6 நாடுகள்தான் காரணம்..
அதே வேளையில், உள்ளடக்கத்திற்காக ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து, புதியவர்கள் ஷாப்பிங் செய்ய, அதை பதிவேற்ற உதவுகின்றனர். இங்கு போட்டி மனப்பான்மை என்று எதுவும் இல்லை. உன் விடியோவிற்கு நான் வருகிறேன் என் விடியோவிற்கு நீ வா என்று ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
நியூஸ்18 கிராமத்தை அடைந்தபோது, கன்டென்ட் வீடியோக்கள் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அருகிலுள்ள ஒரு வீட்டில் வீடியோ படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர் .
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து யூடியூபர்களும் அடிக்கடி ஒன்று கூடி, உள்ளடக்கம் குறித்து பரஸ்பர முடிவுகளை எடுக்கின்றனர். இந்த கிராமத்து மக்களின் வீடியோக்களில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு கிராம மக்களுக்குள் நடைபெறுகிறது. போட்டி , பொறாமை இன்றி நான் நீ என்று முன்வருகிறார்கள்.
55 வயதான பியாரேலால் கிராமத்தில் மட்டும் நடக்கும் ராம்லீலா நாடகங்களில் நடித்து வந்தார். ஆனால் இன்று அவரது புகழ் இன்று அந்த கிராமத்தையும் தாண்டி பரவியுள்ளது. 15 வயதான ராகுல், தனது சொந்த யூடியூப் சேனலில் லட்சக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார்.
பாரம்பரிய முறைப்படி பங்களாதேஷ் காதலியை மணந்த சென்னை பெண்
மது கோசலே என்பவர் தனது யூடியூப் சேனலில் தனது குரலில் பாடல்களைப் பதிவேற்றி வருகிறார், மேலும் சக கிராமவாசிகள் தயாரிக்கும் உள்ளடக்கத்திலும் நடிக்கிறார்.
கிராம மக்கள் கேமரா, மைக் போன்ற உபகரணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கிராமத்தில் வசிக்கும் இங்கு யாரும் நடனம் அல்லது நடிப்பில் முறையான பயிற்சி பெறவில்லை, ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் விதத்தில் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் சேத்தன் நாயக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chattisgarh, Youtube