ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வாழும் அதிசயம்.. காண்போரை ஆச்சரியத்தில் மிரள வைக்கும் வீடியோ!

வாழும் அதிசயம்.. காண்போரை ஆச்சரியத்தில் மிரள வைக்கும் வீடியோ!

மிரள வைக்கும் வீடியோ!

மிரள வைக்கும் வீடியோ!

ஆக்டோபஸ் இனத்தைச் சேர்ந்த அரிதான கிளாஸ் அக்டோபஸ் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆறு அறிவு கொண்டவர்கள் என்பதால் இந்த உலகில் நமக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற எண்ணம் மனிதனுக்கு தோன்றக்கூடும். அப்படிப்பட்ட சிந்திக்கும் போதும் எல்லாம், இயற்கை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஏதாவது ஒரு அதிசயத்தை காட்டி ஆச்சர்யப்படுத்துகிறது. குறிப்பாக ஆழ்கடலில் அளவிட முடியாத அதிசயங்களும், வினோதமான உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் எவ்வளவு தான் முட்டிமோதினாலும் இதுவரை கடலடிப்பரப்பின் 90% பகுதிகள் ஆராய முடியவில்லை எனக்கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட அதிசயமான உயிரினம் ஒன்றைப் பற்றிய போட்டோக்கள் தான் இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலே உள்ள போட்டோவை சாதாரணமாக பார்க்கும் போது அலங்கார விளக்குகள் எங்கோ தொங்கவிடப்பட்டதாகவும், அழகான ஓவியம் போலவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் இதுவொரு வாழும் அதிசயமாகும். ஆம், ஆக்டோபஸ் இனத்தைச் சேர்ந்த அரிதான கிளாஸ் அக்டோபஸ் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அரிய வகை ஆக்டோபஸ்:

'தி ஆக்சிஜன் ப்ராஜெக்ட்' என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிகு ஜிகுவென ஜொலிக்கக்கூடிய 'கிளாஸ் ஆக்டோபஸ்' கடலில் நீந்திக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒளி ஊருடுவும் வகையில் உள்ள இதன் ட்ரான்ஸ்பிரண்ட் தோற்றம் காரணமாக கண்ணாடி ஆக்டோபஸ் என அழைக்கப்படுகிறது. நீலக்கடலில் அமைதியாக நீந்திக்கொண்டிருக்கும் ஆக்டோபஸின் ஒளிரும் வெள்ளை மற்றும் மஞ்சள் புள்ளிகள் மற்றும் அதன் உள் உறுப்புகள் தெளிவாக பார்க்க முடியும்.

Read More : குடித்துவிட்டு ஹாங்ஓவர் ஆகிவிட்டால் ஜாலியாக லீவு எடுங்க: இப்படி உண்மையை சொல்லி லீவு கூட எடுக்கிறாங்களாம் பா?

வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், "அவை கண்ணாடி போல தெளிவாக உள்ளன, அவற்றின் நரம்புகள் மற்றும் செரிமானப் பாதையை நீங்கள் பார்க்க முடியும். அவற்றின் தோற்றம் உருமறைப்பு மற்றும் தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவுகிறது” என தெரிவித்துள்ளார். மற்றொருவர் “வாழ்க்கையில் அனைத்தையும் தெரிந்து கொண்டோம் என எண்ணும் போது கடலை நினைத்தாலே போதும்... அது பல ஆச்சர்யங்களை மறைந்து வைத்துள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார்.

கிளாஸ் ஆக்டோபஸ் சிறப்பம்சங்கள்:

அறிவியல் ரீதியாக விட்ரெலெடோனெல்லா ரிச்சார்டி என அழைக்கப்படும் கிளாஸ் ஆக்டோபஸ் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உள்ள கடல் காணப்படுகின்றன. சூரிய ஒளி புகாத ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக்கூடிய இது, 1918 ஆம் ஆண்டுதான் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. நரம்புகள் மற்றும் செரிமானப் பாதை ஆகிய உள்ளுறுப்புகள் கூட வெளிப்படையாக தெரியும் அளவிற்கு அமைந்துள்ள இதன் உடலமைப்பு, எதிர்களிடம் இருந்து தப்பிக்கவும், மறைந்து கொள்ளவும் உதவுகிறது.

நன்றாக வளர்ந்த ஆக்டோபஸ்கள் பதினெட்டு அங்குல நீளம் கொண்டயாக இருக்கும். இவற்றிற்கும் பிற ஆக்டோபஸ்களைப் போலவே 8 உணர்ச்சிகொடுக்குகள் உள்ளன. இதன் சராசரி ஆயுட்கலாம் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய வகை ஆக்டோபஸ் பற்றிய வீடியோவை இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Octopus, Trending Video, Viral