பசுவை வேட்டையாடி கொண்டிருந்த புலிகள் அருகே பயப்படாமல் தில்லாக நின்ற காளை - வைரல் வீடியோ

பசுவை வேட்டையாடி கொண்டிருந்த புலிகள் அருகே பயப்படாமல் தில்லாக நின்ற காளை - வைரல் வீடியோ

வீடியோ காட்சி

 • Share this:
  பசுவை வேட்டை கொண்டிருந்த புலிகளின் அருகே காளை ஒன்று தில்லாக நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

  சமூக வலைதளத்தில் வைரல் வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். பல வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும், ஆனால் சில வீடியோக்கள் உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காமல் இருக்கும். அதுப்போன்ற வீடியோ தான் இதுவும்.

  இந்த வீடியோவில் 3 புலிகள் மேய்ச்சலுக்கு வந்த ஒரு பசுவை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. பசுவின் உடலை கிழித்து அதனை புலிகள் இறையாக்கி கொண்டிருக்கிறது. அப்படியிருந்துமம் காளை ஒன்று புலிகளுக்கு அச்சப்படாமல் அதன் அருகே நின்று கொண்டிருக்கிறது.  இந்த வீடியோவை அங்கு வசிக்கும் கிராம மக்கள் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ சற்று தெளிவாக இல்லையென்றாலும் காளை புலிகள் அருகே நிற்பது தெளிவாக காட்டுகிறது. பொதுவாக காளை, பசு மாடுகள் வேட்டையாடும் வனவிலங்குகளை கண்டால் பயந்து ஒடுவது வழக்கமான ஒன்று.  ஆனால் பசுவை புலிகள் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சற்றும் அஞ்சாமல் காளை அதன் அருகில் இருப்பது தான் ஆச்சரியமாக இருந்தது. காளையை அங்கிருந்து வரவைக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் காளை சற்றும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது என்பது தான் வியக்கவைக்கும் ஒன்றாக இருந்தது.
  Published by:Vijay R
  First published: