ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

"சமைப்பதற்காக பிறக்கவில்லை" - இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை!

"சமைப்பதற்காக பிறக்கவில்லை" - இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை!

அரசுப்பள்ளி ஆசிரியை

அரசுப்பள்ளி ஆசிரியை

குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை பெற வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆந்திராவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், தனக்கு சொந்தமான நிலத்தை பெண்கள் குழுவுடன் இணைந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு பலருக்கும் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளார்.

இந்தியாவில் வேளாண்மை பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. போதிய மழையின்மை மற்றும் விளைச்சல் இன்மை காரணமாக பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், வேளாண்மையை கைவிட்டு வேறு தொழில்களுக்கு இடம்பெயர்கின்றனர். நிலம் வைத்திருப்பவர்களே கூலித்தொழிலை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய கூலிகளாக இருந்தவர்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தின் நிலை கவலைக்குரியதாக இருக்கும் நிலையிலும் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானோர் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை பெற வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கின்றனர். இது உடல் நலனுக்கு கேடு என்றாலும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, செயற்கை மருந்துகளை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில் ஆந்திராவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்.

தனக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை முறை சார்ந்து ஆர்கானிக் விவசாயத்தை மட்டுமே மேற்கொண்டு வருகிறார். அவர் பெயர் புலமதி. விசாகப்பட்டினத்துக்கு அருகாமையில் இருக்கும் மஜ்ஜிவால்சா கிராமத்தைச் சேர்ந்த அவர், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். இதனால், தனக்கு சொந்தமான நிலங்களில் முழுக்க இயற்கை முறையில் பயிரிட்டு அறுவடை செய்து வரும் அவர், அந்த வேலைகளுக்கு பெண்களை மட்டுமே ஈடுபடுத்துகிறார்.

பெண்களால் விவசாயம் செய்ய முடியாது என்ற ஸ்டீரியோடைப் எண்ணங்களை அழிக்கும் விதமாக, முயற்சியை எடுத்து, அதில் வெற்றியையும் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையாக இருந்தாலும், இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு எனத் தெரிவித்துள்ளார். தரமற்ற உணவுப்பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகளில் உருவாகும் காய்கறிகள் உடலுக்கு தீங்கானது எனத் தெரிவிக்கும் அவர், இதில் இருந்து விடுபட இயற்கை விவசாயம் மட்டுமே சிறந்தது எனத் தெரிவிக்கிறார்.

Also read... குடிபோதை கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண்... பிரசவம் பார்த்த பெண் காவலர்!

மேலும், ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே விவசாயத்தை செய்து, பெண்களை உதவிக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது பெண்களே அனைத்து விவசாய பணிகளையும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது, சமைப்பதற்காக மட்டுமே பெண்கள் அல்ல என புலமதி தெரிவித்துள்ளார். தன்னுடைய நிலத்தில் பெண்கள் மட்டுமே இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதாகவும், தாங்கள் ஒரு குழுவாக இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இயற்கையாக காய்கறிகள் விளைவிப்பதால், மக்களிடம் தங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு பலருக்கும் முன்மாதிரியாக புலமதி திகழ்கிறார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Green Heroes, Organic Farming