நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்துக்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஸ்வாசம், வீரம், விவேகம் உள்ளிட்ட படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைலில் நடித்து வந்த அஜித், இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பிளாக் ஹேர்ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இதனிடையே வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவிடம் லைவில் சென்று சிலர் எங்கே வலிமை அப்டேட் என கேட்டு அதற்கு அவர் என்ன கேட்கின்றீர்கள் எனக்கு புரிய வில்லை என வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டார்.
அதன் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எங்கே என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலிமை அப்டேட் என ரசிகர்கள் கத்தி கூச்சலிட்ட வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
— ஓடுன ஒரே படம் துப்பாக்கி தான் ™ (@OdunaOrePadam) February 14, 2021
மேலும் தற்போது Valimai Update என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் போனி கபூருக்கு டேக் செய்து வலிமை அப்டேட் எங்கே என கேட்டு வருகின்றனர்.