ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆணுறுப்பை பெரிதாக்க விபரீத முடிவு எடுத்த நபர்.. இறுதியில் நடந்த சோகம்

ஆணுறுப்பை பெரிதாக்க விபரீத முடிவு எடுத்த நபர்.. இறுதியில் நடந்த சோகம்

ஆணுறுப்பை பெரிதாக்க விபரீத முடிவு எடுத்த நபர்

ஆணுறுப்பை பெரிதாக்க விபரீத முடிவு எடுத்த நபர்

Viral | தாய்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆணுறுப்பின் அளவு பெரிதாக வேண்டும் என்பதற்காக வளையம் ஒன்றை அதில் மாட்டியிருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெரும்பாலான ஆண்களுக்கு, ஆணுறுப்பின் அளவு, வளர்ச்சி, நீளம் ஆகியவைப் பற்றி கவலை இருக்கிறது. தன்னுடைய ஆணுறுப்பு போதுமான அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதா என்ற சந்தேகம் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது. அதே போல ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட முடியும் என நினைக்கின்றனர். மேலும், ஆணுறுப்பின் அளவை அதிகரிக்க இணையத்தில் வரும் தகவலை வைத்து கொண்டு பல விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். தாய்லாந்தில் ஒருவர் தனது ஆணுறுப்பு பெரிதாக மாற எடுத்த முடிவு தான் தற்போது ஆபத்தில் முடிவடைந்துள்ளது.

  தாய்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆணுறுப்பின் அளவு பெரிதாக வேண்டும் என்பதற்காக வளையம் ஒன்றை அதில் மாட்டியிருக்கிறார். கடந்த 4 மாதங்களாக அவர் ஆணுறுப்பில் வளையத்தை அணிந்து இருந்ததால் ஆணுறுப்பு வீங்கி வலியால் அவதிப்பட்டுள்ளனார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவர் நடந்த விஷயங்களை மருத்துவரிடம் கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பில் 4 மாதங்களாக வளையம் அணிந்து இருந்ததால் ரத்தம் ஓட்டம் குறைந்து வீக்கம் அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

  Also Read : 18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்... அதுவும் லவ் மேரேஜ்

  இதையடுத்து ஆணுறுப்பில் இருந்த வளையத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆணுறுப்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அதை அகற்ற முடியாமல் மருத்துவர்கள் திக்குமுக்கு ஆடி உள்ளனர். இதனால் தீயணைப்பு துறையினரின் உதவியை மருத்துவர்கள் நாடி உள்ளனர். மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு குழுவினர் ஆணுறுப்பில் சிக்கி இருந்த வளையத்தை கட்டர் மற்றும் அற்கான டூல்கள் கொண்டு அகற்ற முயன்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஆணுறுப்பில் சிக்கி இருந்த வளையத்தை தீயணைப்பு துறையினர் போராடி வெட்டி எடுத்னர்.

  பாலியல் உறவில் ஒருவருக்கு கிடைக்கும் திருப்திக்கும், ஆணுறுப்பு அளவுக்கும், நீளத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பலருக்கும் அந்த புரிதல் இல்லை. ஆண் பெண் உட்பட பலரும் இத்தகைய தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்பதை இந்த நிகழ்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral