ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு காபி டேபிள் - தாய்லந்தில் அதிர்ச்சி சம்பவம்!

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு காபி டேபிள்

பார்சலை திறந்தவுடன் அது உண்மையில் ஒரு காபி டேபிள் என்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆன்லைனில் இருக்கும் போலியான விளம்பரங்களை பார்த்து ஐபோன் வாங்கிய இளைஞர் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ள சம்பவம் தாய்லந்தில் நடைபெற்றுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் விற்பனை வலைத்தளம் ஒன்றில் ஐபோன்கள் குறைவான விலையில் தருவதாக இருந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என ஆசையில் இருந்த அந்த இளைஞருக்கு, உடனடியாக வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் , ஆர்டர் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், ஐபோன் பார்சலை வாங்கிய அந்த இளைஞர் ​​ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தார். ஏனெனில் அவர் பெற்ற பார்சலின் அளவானது, அவரைப் போலவே உயரமாக இருந்துள்ளது. பார்சலை திறந்தவுடன் அது உண்மையில் ஒரு காபி டேபிள் என்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுவும் அந்த காபி டேபிளானது ஐபோன் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓரியண்டல் டெய்லி மலேசியாவில் வெளியான தகவலின்படி, துரதிர்ஷ்டவசமாக, ஆர்டரை வழங்குவதற்கு முன்பு அவர் தயாரிப்பு விவரங்களை காண தவறிவிட்டார். தற்போது தனது தவறை எண்ணி வருத்தப்படும் அவர், தனது சமூக வலைதள பக்கங்களில், தனது முட்டாள்தனமான செயல் குறித்து விளக்கியுள்ளார். மேலும் அந்த காபி டேபிள் குறித்த புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். தொலைபேசி மலிவானது என்பதை பார்த்து தான் எமர்ந்துவிட்டேன், இதுபோல யாரும் செய்துவிடாதீர்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலி ஐபோன்களை கொடுத்து ஏமாற்றும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், குவஹாத்தியைச் சேர்ந்த ஒருவர் பிளிப்கார்ட்டில் இருந்து ஒரு ‘போலி’ ஐபோனை பெற்றார், அதற்காக அவர் ரூ .1,24,900 செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபோனை வாங்கிய அவர், தொலைபேசி சார்ஜ் செய்வதில் பிரச்னை இருப்பதை கண்டறிந்த பின்னர், அவர் அருகிலுள்ள கடைக்கு எடுத்துச் சென்றார், அங்கு அவர் பெற்ற தொலைபேசி உண்மையில் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

Also read... சண்டிகர் டூ சென்னை - 60 வயது நண்பர்களின் பயண அனுபவம்!

2018ம் ஆண்டில் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.55,000 மதிப்புள்ள ஐபோன் 8-ஐ ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு ஆப்பிள் போன் பெட்டியில் நிரம்பிய ஒரு சோப் அனுப்பப்பட்டிருந்தது. சமீபத்தில் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக சுமார் 1,10,231-ஐ ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு டெலிவரி பார்சல் வந்த போது ஆப்பிள் ஜூஸ் இருந்ததால் லியு அதிர்ச்சியடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை என்றாலும், லியு ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடியாக ஆர்டர், செய்த நிலையில் ஆப்பிள் ஜூஸ் வந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: