குழந்தை பிறப்பு என்றாலே ஒரு மகிழ்வான நிகழ்வுதான். அதிலும் இரட்டை குழந்தைகள் என்றால் பலருக்கும் அது இரட்டிப்பு சந்தோஷம்தான். ட்வின்ஸ் என்றாலே நாம் அவர்களை வியந்து பார்ப்பதும் அவர்களின் நடை உடை பாவனைகளை கவனிப்பதும் அவர்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை கண்டுப்பிடிக்க முயல்வதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் இங்கு ஒரு இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த டெக்ஸாசில் காலி ஜோ ஸ்காட் என்ற பெண்ணிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டாவது குழந்தை ஒருவருட இடைவெளியில் பிறந்துள்ளது. அதாவது டாக்டர் சி செக்ஷன்படி ஜனவரி 11, 2023ம் நாள் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளனர்.
அவரின் உடல்நிலையை சார்ந்து டிசம்பர் 31 ஆம் தேதியே காலி ஜோ ஸ்காட்டின் குழந்தைப்பேறு நாள் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 31, 2022ம் நாள் இரவு நடந்த அறுவை சிகிச்சையில் முதல் குழந்தை ஆனி ஜோ 11.55க்கும் இரண்டாவது குழந்தை எஃபி ரோஸ் ஜனவரி 1, 2023 நள்ளிரவிலும் பிறந்துள்ளது.
இரட்டை குழந்தைகள் என்றாலே தனிச்சிறப்பு அதிலும் ஒரு குழந்தை ஒரு வருடத்திலும் மற்றொரு குழந்தை அடுத்த வருடத்திலும் பிறந்துள்ளது கூடுதல் வியப்பாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது. குழந்தைகளோடு காலி ஜோ ஸ்காட் இருக்கும் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
View this post on Instagram
மேலும் பலர் கமெண்டுகளை அள்ளித்தெளித்த வண்ணம் உள்ளனர். அதில் ஒருவர் கண்டிப்பாக நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள் என்றும், ஒரே கருவறை ஆனால் வேறு வேறு பிறந்தநாள் என்றும், ஒருவர் குழந்தையின் புகைப்படத்தை பார்த்து அவர்கள் லிப்ஸ்டிக் போட்டுள்ளனரா? எனவும் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.